புதுதில்லி, பிப். 28-
அறிவிக்கப்படாத வியா திக்காக அயல்நாட்டில் சிகிச் சை பெற்ற காங்கிரஸ் தலை வர் சோனியாகாந்தி, வழக்க மான மருத்துவ சோதனைக் காக வெளிநாடு சென்றுள்ளார்.
முந்தைய சிகிச்சை முடித்த அறு மாதங்களுக்குப்பின் வழக்கமான சோதனைகளுக் காக சோனியாகாந்தி வெளி நாடு சென்றுள்ளார் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செய லாளர் ஜனார்த்தன் த்விவேதி கூறினார். 65 வயதாகும் சோனியா காந்தி நான்கைந்து நாட்களில் நாடு திரும்புவார் என்றும் அவர் கூறினார்.
அவர் இல்லாத வேளைக ளில் கட்சி அலுவல்களைக் கவனிக்க குழு நியமிக்கப்பட் டுள்ளதா என்று செய்தியாளர் கள் கேட்டனர். குறுகிய காலம் என்பதால் அப்படி ஒரு ஏற் பாடு இல்லை என்றும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

You must be logged in to post a comment.