மன்னார்குடி, பிப். 28 –
அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, ஊழியர்கள் பணிக்கு வராததால் மன்னார்குடியில் முக்கிய மான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக்கிடந்தன.
நகரின் நான்கு நீதிமன்றங்கள், வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின்வாரிய அலுவ லகங்கள், ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலகம், பிஎஸ் என்எல் அலுவலகங்கள் போன்ற முக்கிய அலுவலகங் களின் பணிகள் முற்றிலும் முடங்கின. காப்பீட்டுக்கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.தண்டபாணி தலைமை வகித்தார். வங்கி ஊழியர் கூட்டமைப்பின் வி. திருநாவுக் கரசு, முகவர் சங்க தலைவர் ஜி.மகாலிங்கம், வளர்ச்சித் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பின் கிளைத் தலைவர் ஆர்.நாகராஜன், இந்திய தொழிற் சங்க மையத்தின் நகர பொறுப்பாளர் பி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் போராட் டத்தை ஆதரித்துப் பேசினர்.
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட இணைச்செயலாளர் வடமலை சேதுராமன் ஆர்ப்பாட் டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். கிளைச் செயலாளர் எஸ்.சுந்தரராஜகோபாலன் நன்றி கூறினார்.
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மின்வாரிய கோட்ட அலுவலகம் முன்பாக இ.ஜோதி ராம லிங்கம் தலைமையில் போராட்ட விளக்கக்கூட்டம் நடை பெற்றது. கோட்ட தலைவர் எஸ்.செல்வராஜ், மின்ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் எஸ்.சகாயராஜ், திட் டத்துணைத் தலைவர் க.சாந்தகுமார், உபகோட்ட செய லர்கள் ஆர்.வி,அசோகன், எஸ். காளிதாஸ், ஜி.சேகர், கே. அசோகன், வி.அருணகிரிநாதன், கிளைத் தலைவர் ராஜேந்திரன், கிளைச் செயலாளர் வி.ராஜசேகரன், மற்றும் சிஐடியுவின் சார்பில் கே. நீலமேகம், தங்க ஜெகதீசன் மற்றும் இதர பொறுப்பாளர்களும் உரையாற்றினர். ஊழியர்கள், தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.