இம்பால், பிப். 28-
மணிப்பூர் பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு துறை அமைச்சர் என்.பிரேனின் மகன் நோங்தோங் பாம் அஜய் மீது கொலைக்குற்றம் சாட்டப் பட்டுள்ளது. 2011 மார்ச் 20ல் இளைஞர் ஐரோம் ரோஸர் என்பவரைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட் டுள்ளது.
இம்பால் மேற்கு மாவட்ட தலைமை நீதியியல் நீதிபதி முன் சிபிஐ குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. வழக்கை விசாரிக்குமாறு இம்பால் கிழக்கு மாவட்ட அமர்வு நீதி பதிக்கு தலைமை நீதியியல் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட அஜய் ஒரு அமைச்சரின் மகன் என்ப தால், மாநில அரசு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. அஜயின் கூட்டாளிகள் நால் வரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர் கள் குற்றமற்றவர்கள் என்று சிபிஐ கூறி, அவர்களை விடு விக்கப் பரிந்துரைத்துள்ளது. மார்ச் 16 முதல் விசாரணை தொடங்கும்.

Leave A Reply