பெட்ரோல்-எரிபொருள்விலை கடுமையாக உயரும்
புதுதில்லி, பிப்.28-இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 123 டாலர் என்ற அளவில் திங்கட்கிழமை இருந்தது. ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மானியம் அளிக்க வேண்டி யிருப்பதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (எல்பிஜி) விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில் முடிவடைவதைத் தொடர்ந்து எரிபொருட்கள் விலையை கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே, பெட்ரோல் உள் ளிட்ட அனைத்து எரிபொருள்கள் விலையையும் மத்திய அரசு உயர்த்தவேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் நிர்ப்பந்தப்படுத்துகின்றன.ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பதற்றம் மற்றும் ஈரான் மீது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை ஆகியவை, உலக கச்சா எண்ணெய்ச் சந்தையில் நெருக்கடியைத் தந்துள்ளது. 5 மாநிலத் தேர்தல் முடிவு மார்ச் மாதம் 6ம் தேதி வெளியாகிறது. அதற்கு மறுநாளில் இருந்து, எந்த நேரத்திலும், மத்திய அரசு எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது என எண்ணெய் விற்பனை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.இந்திய கச்சா எண்ணெய்த் தொகுப்பில் கடந்த மாதம் ஒரு பேரலுக்கு 108 டாலர் முதல் 110 டாலர் வரை இருந்தது. திங்கட்கிழமையன்று ஒரு பேரல் 123 டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் மத்திய அரசு உடன டியாக எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நெருக் கடிக்கு ஆளாகியுள்ளது. பெட்ரோல்-எரிபொருள் விலை கடைசியாக டிசம்பர் மாதம் 1ம் தேதி மாற்றப்பட்டதில் இருந்து, இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.443 கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விற் பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுப்பாட்டை நீக்கியது.இந்தியன் ஆயில் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் ரூ.1277 கோடி இழப்பைச் சந்தித்துள்ள தாகவும், நிதியாண்டின் இதர காலத்தில் ரூ.360 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பெட்ரோல் விலை மாற்றம் செய்யப்பட்டு, லிட்டருக்கு 0.78 காசு குறைக்கப் பட்டது. ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூ.14.50 நஷ் டத்தை சந்திப்பதாகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையில் ரூ.28.76 இழப்பு ஏற்படுவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) ஒன்றுக்கு இந்திய எண்ணெய் நிறுவனம் ரூ.388 நஷ்டம் அடைவதாகவும், பாரத் பெட்ரோலிய கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நாள் ஒன் றுக்கு சராசரியாக ரூ.445 கோடி வரை மூன்று எரிபொருள் விற்பனையில் நஷ்டம் அடைவதாகவும் கூறப்பட் டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் நாள் ஒன்றுக்கு ரூ.299 கோடி இழப்பை சந்திப்பதாக கூறியுள்ளனர்.
—————————————-
ஒலிம்பிக் குழுவிற்குஇந்திய அரசு வேண்டுகோள்
புதுதில்லி, பிப்.28-டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை ஏற்க வேண்டாம் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச் சகம், சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு வேண்டுகோள் விடுத் துள்ளது.மத்திய விளையாட்டுத்துறையின் இணை செயலர் ராகுல் பட்னாகர், சர்வதேச ஒலிம்பிக் குழுத்தலைவர் ஜேக்ஸ் ராக்ஸுக்கு பிப்ரவரி 24ம் தேதி எழுதிய கடிதத்தில் ‘’லட்சக்கணக்கானோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை மறுப்பதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டின் உன்னதமான நோக்கங்களை உலகிற்கு அறிவிப்பதும் ஆகும் என்று அவர் குறிப்பிட் டுள்ளார். முன்னதாக, இந்தியாவின் எதிர்ப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கும் இங்கிலாந்திற்கும் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித் ததும், பல தலைமுறைகளுக்கும் தீங்கு விளைவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வாரிசான டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் விஜய் குமார் மல் கோத்ராவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுத்தலைவர் எழுதிய கடிதத்தில், போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக் காக அனுதாபம் தெரிவிக்கும் அதேவேளையில், டவ் கெமிக்கல் நிறுவனத்தின் நிதியுதவியை ஏற்றுக் கொள்வது என்பதை சர்வதேச ஒலிம்பிக் குழுவும், ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகள் ஏற்பாட்டுக்குழுவும் முடிவு செய்து விட்டது. மேலும் போபால் துயரச் சம்பவத்திற்கும் டவ் கெமிக்கல் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. கடந்த 30 ஆண்டுகளாக டவ் நிறுவனம் ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டிகளுக்கு நிதியுதவி அளித்து வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.