புதுக்கோட்டை, பிப்.28-
புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள அனைத்து பொதுத் துறை வங்கிகள், எல்ஐசி நிறு வனங்கள், தொலை தொடர்புத் துறை அலுவலகங்கள் அனைத் தும் முடங்கின. பெரும்பாலான அரசு அலுவலகங்களும் ஊழி யர்கள் ஏதுமின்றி வெறிச் சோடிக் கிடந்தன.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலை வரை நடை பெற்ற பேரணியில் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கே.கணபதி தலைமை வகித் தார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் தொடக் கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க. செல் வராஜ் நிறைவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் ப.சண்முகம், தொமுச மாவட் டத் தலைவர் ரத்தினம், ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் வி. சிங்கமுத்து, தேமுதிக தொழிற் சங்கத் தலைவர் ராஜீ, எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் விஸ்வ நாதன் ஆகியோர் பேசினர்.
பேரணி – ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு சார்பில் முன் னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேக ரன், நகர்மன்ற முன்னாள் உறுப் பினர் சண்முகபழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் எம். ஜியா வுதீன், எஸ்.பாலசுப்பிரமணி யன், ஆவுடைமுத்து, முகம தலி ஜின்னா, அரசுமுகம், அடைக்கலம், ஆவுடைமுத்து, யாசிந்த், மாரிக்கண்ணு, சண் முகராஜா, ரமேஷ், முத்தையா, நாகராஜ், பிச்சைமுத்து, எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட துணைத்தலைவர் எம்.அசோ கன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு என். கண்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொமுச சார்பில் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சிவபாலன், எம்.வேலுச்சாமி, கே.ராஜேந் திரன், என்.காமராஜ், எஸ்.சாமி நாதன், ஏஐடியுசி சார்பில் விடு தலைக்குமரன், செங்கோடன், சுப்பிரமணியன், முருகானந் தம், ராமச்சந்திரன், அரசப்பன், தேமுதிக சார்பில் ராஜேந்தி ரன், ஆறுமுகம், ரங்கராஜ், சக்தி வேல், முத்தழகு, எச்எம்எஸ் சார்பில் கிருஷ்ணகுமார், திவ் யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள்
அனைத்து தொழிற்சங்கங் களும் விடுத்த அறைகூவலை ஏற்று புதுக்கோட்டை மாவட் டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் வேலை நிறுத்தப் போராட் டத்தில் கலந்து கொண்ட தோடு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி, பொருளாளர் எம்.ஜோஷி ஆகியோர் பேசி னர். சங்க நிர்வாகிகள் எஸ். நாகராஜன், கே.நாகராஜன், கு. சத்தி, எம்.சி.சக்திவேல், துரை. அரங்கசாமி, எஸ்.காமராஜ், தி.நடராஜன், ஆர்.ரெங்கசாமி, இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மா.குமரேசன் உள்ளிட்ட ஏராள மான அரசு ஊழியர்கள் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: