பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து நொய்டாவைச் சேர்ந்த பான்டெல் என்ற நிறுவனம் மலிவு விலை டேப்ளட் கணினிகளை விற்பனை செய்யவுள்ளது.உலகின் விலை மலிவான டேப்ளட் என்று கூறப்படும் ஆகாஷ் 2500 ரூபாய் விலையில், மனித வள மேம்பாட்டு அமைச்சக ஆதரவில் வெளியிடப்பட்டது. ஐஐடி மாணவர்கள் வடிவமைப்பில் உருவான இந்த டேப்ளட் மாணவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.இந்த டேப்ளட்டை தயாரித்து வர்த்தக ரீதியாக சந்தைப்படுத்துவது இங்கிலாந்தைச் சேர்ந்த டேட்டாவிண்ட் என்ற நிறுவனம் ஆகும். தற்போது அந்நிறுவனம் ஆகாஷ் டேப்ளட் விற்பனைக்கான முன்பதிவை முடித்துக் கொண்டு புதிய மாடலாக யுபிஸ்லேட் 7+ (ருbiளுடயவந7+) என்ற பெயரில் ரூ.2999 விலையில் சிம் கார்டு, ஜிபிஆர்எஸ், ஒய்-பி வசதியுடன் கூடிய டேப்ளட்டுக்கு முன்பதிவைத் தொடங்கி இருக்கிறது.பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு முன்பதிவு முடிந்து ஏப்ரல் மாதத்திற்கான முன்பதிவு நடைபெறுவதாக hவவயீ://யமயளாவயடெநவ.உடிஅ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை விநியோகம் குறித்த தகவல்கள் வெளியிடப்படாமலே உள்ளது.இந்நிலையில் நொய்டாவைச் சேர்ந்த பான்டெல் (ஞயவேநட) என்ற நிறுவனம் மூன்று விதமான டேப் ளட் கணினிகளை மார்ச் 5 முதல் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.இந்த டேப்ளட்டைப் பயன்படுத்தி இணையத்தில் உலவ, மின்னஞ்சல் அனுப்ப, பெற, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த, யூடியூப் வீடியோக்களைப் பார்க்க, மின் நூல்களைப் படிக்க எனப் பல பயன்பாட்டையும் பெற முடியும்.இதில் ஞயவேய கூயீயன ஐளு 701ச என்ற டேப்ளட் ரூ.3250 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. 7 அங்குலத் திரை, ஆண்ட்ராய்ட் 2.3 இயங்குதளம், 256 எம்பி டிடிஆர்2 ரேம் மற்றும் 2 ஜிபி கொள்ளளவு, கூடுதலாக 32 ஜிபி அளவு வரை மெமரி கார்டு இணைத்துக்கொள்ளும் வசதி, ஜிபிஆர்எஸ், ஒய்-பி, விஜிஏ கேமரா மற்றும் எல்சிடி/எல்இடி டிவியில் இணைத்துப் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.பிஎஸ்என்எல் நிறுவன சலுகையுடன் இதே போன்ற டேப்ளட் கணினி ரூ.3499 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மாடல் பெயர் ஞயவேய கூயீயன ஐளு 701சுக்ஷ என்பதாகும். பிஎஸ்என்எல் சிம் கார்டு மற்றும் 3 மாதத்திற்கான இணையப் பயன்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.இரண்டாவது வகை ஞயவேய கூ-ஞயன றுளு 704ஊ என்று பெயரிடப்பட்ட டேப்ளட்டின் விலை ரூ.10,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 512 எம்பி ரேம், 2 மெகா பிக்சல் கேமரா, புளூடூத் மற்றும் 3ஜி வசதியை சிடிஎம்ஏ/ஈவிடிஓ மற்றும் ஜிஎஸ்எம் (ஊனுஆஹ/நுஏனுடீ/ழுளுஆ) தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சமாகும்.மூன்றாவது வகை ஞயவேய கூ-ஞயன றுளு802ஊ டேப்ளட் கணினியில் 8 அங்குல திரையும், 1.2 கிகாஹெர்ட்ஸ் பிராசசர், 512 எம்பி ரேம், 4 ஜிபி கொள்ளளவு, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக உள்ளன. இதன் விலை ரூ.13,500 ஆகும்.ஆகாஷ் டேப்ளட்டிற்கு சரியான போட்டியாக இந்த பாண்டா டி-பாட் (ஞயவேய கூ-யீயன) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டா டேப்ளட் முன்பதிவு hவவயீ://றறற.யீயவேநட.in என்ற இணையதளத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.