மோகா, பிப். 28-
அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை ஹர்பிரீத் கவுர் என்பவரை மோட்டார் சைக்கிளில் சென்ற அடையா ளம் தெரியாத இளைஞர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்ட னர். அவர் உடலில் இரு தோட்டாக்கள் பாய்ந்தன. ஒரு தோட்டா முன்நெற்றியிலும், மற்றொன்று காலிலும்பட்டது. அவர் லூதியானாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கவுர் சென்ற காரை நிறுத்தி இளைஞர்கள் சுட்டனர். காரை ஓட்டியவர் தப்பியோடிவிட் டார். அவரிடம் விசாரணை நடத்த காவல்துறை அவரைத் தேடி வருகிறது. கவுரின் கண வர் கனடாவில் வசித்து வரு கிறார். கனடாவில் வசிக்க விரும்பும் இந்தியர்களுக்கு அவர் உதவி செய்து வருகி றார். கனடா செல்ல ஆசைப் பட்டவருக்கும் கவுரின் கண வருக்கும் இடையில் மோதல் இருந்திருக்கலாம் என்று காவல்துறை கூறுகிறது.

Leave A Reply