நாகப்பட்டினம், பிப். 28-
வேலைநிறுத்தத்தை யொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறையில் தலை மை அஞ்சலகங்கள் முன்பு வேலைநிறுத்த விளக்க ஆர்ப் பாட்டங்கள் நடைபெற் றன.
நாகப்பட்டினம்
நாகை தலைமை அஞ் சல் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் சிஐடியு நாகை மாவட்ட துணைத்தலைவருமான வி.மாரிமுத்து தலைமை தாங்கி விளக்கவுரையாற் றினார்.
சிஐடியு நாகை மாவட் டச் செயலாளர் நாகை மாலி எம்.எல்.ஏ., தொ.மு.ச. மாவட் டத் தலைவர் சோழன் க. சங்கர், மின்வாரியத் தொழி லாளர் முன்னேற்றச் சங்கத் திட்டச் செயலாளர் கோ. திராவிட மணி, சி.பி.ஐ. மாவட்டப் பொருளாளர் ஏ.சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் துணைத் தலை வர் எஸ்.வி.பக்கிரிசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டப் பொருளாளர் வி.எம்.மகேந் திரன், தொ.மு.ச. துணைச் செயலாளர் இரா. தம்பித் துரை, சி.ஐ.டி.யு. மாவட்டப் பொருளாளர் கே.என்.ஆர். சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத் திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங் களைச் சார்ந்த வழக்கறிஞர் ஆர்.நடராஜன், பி.புவனேஸ் வரி, எஸ்.மணி, எஸ்.வி. செல்வக்குமார், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழி யர் சங்கங்களின் சார்பில் சீனி.மணி, எஸ்.ஆர்.ராஜேந் திரன், கணபதி, ஜீவா, கே. ராமதாஸ் வி.ராமலிங்கம், சண்முக சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தலை மை அஞ்சல் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற பொது வேலைநிறுத்த விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு நாடா ளுமன்ற உறுப்பினர் ஏ.கே. எஸ்.விஜயன் தலைமை யேற்றுச் சிறப்புரை ஆற்றி னார். சி.பி.எம். மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் ஜி.ஸ்டாலின், சிஐடியு நாகை மாவட்டத் தலைவர் ஆர். ராமானுஜம், ஏஐடியுசி நாகை மாவட்டச் செயலா ளர் (பொ) கே. இராமன், இரா.இடும்பையன், தொ.மு.ச. துணைத் தலை வர் பொன். நக்கீரன், சிஐடியு மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.காளிமுத்து, குத்தா லம் கல்யாணம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங் களின் சார்பில் டி.இராயர், எம்.கருணாநிதி, எஸ்.ஜெய பால், எம்.சேரன் செங்குட் டுவன், ஆர்.எஸ்.ஸ்ரீதர், எம். மனோகரன், ஜி.ஆதிமூலம், எஸ்.சுரேந்திரன், எம்.கலைச் செல்வன், எம்.ராமகிருஷ் ணன், வி.சேகர், டி.இளங் கொடி, கே.ராமதாஸ் உள் ளிட்ட பலர் பங்கேற்று போராட்டத்தை விளக்கிப் பேசினர். டி.துரை நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: