22.2.12 அன்று தீக்கதிரில் வந்த என் பேட்டியில் 2 தவறு கள் உள்ளன. அதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.1. நான் 1948ல்தான் தலைமறைவு வாழ்க்கை மேற் கொண்டேன். 1964ல் அல்ல. 1948ல் கட்சியின்மீது கடுமை யான அடக்குமுறை. சேலத்தில் தோழர்கள் ராமையா, செல்வராஜ் உட்பட பல தோழர்கள் கைது செய்யப் பட்டனர். கம்யூனிஸ்ட் என்றாலே அடி உதைதான். பெண் களும் பெரிதாக பாதிக்கப்பட்டனர். அந்த காலகட்டத் தில் பெண்கள் வெளியே வந்து கட்சிப் பணியாற்றுவது மிகவும் குறைவு. இந்த நிலையில்தான் சேலம் தோழர்கள், என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டு, அன்று மாலையே என்னைத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்தார் கள். சேலத்தில் தோழர் பிஎஸ்ஆர் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியில் நான் தங்கவைக்கப்பட்டேன்.அதன் பின்னர் என்னை ரயில் வழியாக பெங்களூரு விற்கு அனுப்பி வைத்தனர். ஏற்கெனவே அங்கு தோழர் என்.கே. கிருஷ்ணன் (பார்வதி கிருஷ்ணனின் கணவர்) தங்கியிருந்தார். அங்கு நான் 3 மாதம் தங்கியிருந்தேன். 2. பெரியாரை நாங்கள் எந்தக் கூட்டத்திற்கும் அழைக்க வில்லை. அவருடைய கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இருமுறை கிருஷ்ணகிரி வந்தார். அப்போதுதான் எங்கள் வீட்டில் தங்கினார்.“பாரதி விழா”வை முதல் முதலில் கம்யூனிஸ்ட்கள் தான் முன்னெடுத்து நடத்தினார்கள். கிருஷ்ணகிரியில் ஒவ்வொரு ஆண்டும் ‘பாரதி விழா’ கொண்டாடப் பட்டது. முதலில் தோழர் ஜீவாதான் தொடங்கி வைத் தார். பின்னர் அவர் பலமுறை அதில் கலந்துகொண்டு பேசினார். பாரதிதாசன் மற்றும் தமிழறிஞர்கள் அதில் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.