திருவாரூர், பிப். 28-
பொதுவேலை நிறுத்தம் திருவாரூர் மாவட்டத்தில் முழு வெற்றி பெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலு வலகம் உட்பட மாவட்டத் தில் பல்வேறு அலுவலகங் கள் ஊழியர்களின் வருகை இன்மையால் பணிகள் எது வும் நடைபெறாமல் ஸ்தம் பித்தன. பொதுத்துறை வங் கிகள், மத்திய – மாநில அர சுகள், கூட்டுறவு வங்கிகள் செயல்படவில்லை. வேலை நிறுத்தத்தின் காரணமாக பேருந்து மற்றும் ஆட் டோக்கள் வழக்கத்தை விட குறைவாக இயங்கின. தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய – மாநில அரசுகளுக்கு எதி ராக விண்ணதிர முழக்கங் கள் எழுப்பினர்.
அரசு ஊழியர்கள்
திருவாரூர் மாவட்டத் தில் தமிழ்நாடு அரசு ஊழி யர்சங்கம் முன்னின்று வெற் றிகரமாக போராட்டத்தை நடத்தியது. இதன் காரண மாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகம் மற் றும் பல்வேறு துறை அலு வலகங்கள் வெறிச்சோடி இருந்தன.
மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குட வாசல், வலங்கைமான், நன்னிலம், நீடாமங்கலம் ஆகிய ஏழு வட்டங்களி லும் அனைத்து நிலை வட் டாட்சியர்கள் தொடங்கி அடிப்படை ஊழியர்கள் வரை முழுமையான அள வில் வேலை நிறுத்தம் செய் தனர். மேலும் மாவட்டத் தில் உள்ள 10 ஊராட்சி ஒன் றிய அலுவலகங்களிலும் வேலை நிறுத்தத்தில் வட் டார வளர்ச்சி அலுவலர் கள், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட் பட பல்வேறு நிலைக ளில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் பங்கேற் றனர்.
தொழிற்சங்கங்கள்
தொலைதொடர்புத்துறை யை பொறுத்தவரை கோட் டப்பொறியாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட அனைத்து கிளைகளிலும் 120க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அனைத்து சங்கங்களை சேர்ந்த ஊழியர்களும் இதில் பங்கேற்றனர். எல்ஐ சியைப்பொறுத்தவரை திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய கிளைகளில் வளர்ச்சி அதி காரிகள் உட்பட முழுஅள வில் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் வி.ராஜேந் திரன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. எல்.ஐ.சி ஊழியர் சங்க கிளை செயலாளர் எஸ். செந்தில்குமார் மூத்த நிர் வாகி தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன் னார்குடியில் வளர்ச்சி அதி காரி ஏ.தண்டபாணி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழியர் சங்க கோட்ட இணை செய லாளர் வி.சேதுராமன், கிளைச் செயலாளர் எஸ்.சுந் தரராஜகோபாலன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டியில் கிளைத்தலைவர் ஜி.சரவ ணன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தத்திற்கு முகவர்கள் சங்கமான லிகாய் உள்ளிட்ட சங்கங் கள் ஆதரவு தெரிவித்தன. தென்னக ரயில்வே தொழிற் சங்க ஊழியர்களும் (டிஆர் இயு) மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் முழு மையாக வேலைநிறுத்தத் தில் பங்கேற்றனர். மத்திய அரசின் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் பணிகள் முடங்கின.
ஆசிரியர்கள்
மாவட்டம் முழுவதும் பெரும்பாலான தொடக் கப்பள்ளிகள் செயல்பட வில்லை. தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு இடை நிலை ஆசிரியர் சங்கம் ஆகியவை இணைந்த இந் திய பள்ளி ஆசிரியர் கூட் டமைப்பு முழு அளவில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. ஏனைய சங்கங் களும் ஆதரவு தெரிவித்தி ருந்தன. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து, தங்களின் எதிர்ப்பை தெரி வித்தன. தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி நிர்வாகிகள் டி. ரமேஷ்,கோ.வீரமணி, கோ. ராஜகோபால் ஆகியோர் வேலைநிறுத்தத்தை ஒருங் கிணைத்தனர்.
தொழிற்சங்க கூட்டமைப்பு
சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற் சங்க கூட்டமைப்பின் தலை மையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகராட்சி அரு கிலிருந்து சிஐடியு மாவட் டச் செயலாளர் நா.பால சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் அ. மார்க்ஸ், எல்பிஎப் நிர் வாகி என்.நீலமேகம் ஆகியோர் தலைமையில் கோரிக்கை விளக்கப் பேரணி புறப் பட்டு, தலைமை அஞ்சலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் உரையாற்றினர். இதில் கட் டுமான தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர் கள், நுகர்பொருள் வாணி பக்கழக ஊழியர்கள், டாஸ் மாக் தொழிற்சங்க நிர்வாகி கள், முறைசாரா தொழிலா ளர்கள், ஆட்டோ தொழி லாளர்கள், சாலையோர வியாபாரிகள், மின்சார வாரிய ஊழியர்கள், அங் கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தையல் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், கிராம குடிநீர் தொட்டி இயக்குநர்கள், கூட்டுறவுத் துறை ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளின் சார்பில் பெண் கள் உட்பட சுமார் 3 ஆயி ரம் பேர் கலந்து கொண்ட னர். அனைத்து துறைகளின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணி அடித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் பேரெழுச்சி யுடன் வேலைநிறுத்தம் முழு மையாக நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: