திருப்பூர், பிப். 28- மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 28ம் தேதி பல்வேறு முக்கியத் தொழில்களில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மத்திய ஆட்சியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் திருப்பூர் மாவட்டத்தில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங் களையும், தொழிற்சங்க உரிமையையும் பாதுகாக் கும் சட்டங்களை உறுதி யாக அமல்படுத்த வேண்டும், முறை சாரா தொழிலாளர் களுக்கான சமூகநலப் பாது காப்புக்கு ரூ.1லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன் டியுசி, எச்எம்எஸ், பிஎம் எஸ் உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கங்கள் அறி வித்திருந் தன.இதன்படி செவ்வா யன்று திருப்பூர் மாவட் டத்தின் கேந்திரமான தொழிலாகத் திகழும் பனியன் தொழிற்சாலை களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் முழு மையாக பங்கேற்றனர். அதேபோல் விசைத்தறி, பஞ்சாலை மற்றும் கைத் தறி உள்ளிட்ட ஜவுளித் தொழில்களிலும், கட்டு மானம், சுமைப்பணி, மின் சார வாரியம், சாலைப் போக்குவரத்து, தனியார் சரக்குப் போக்குவரத்து, பாத்திரம் உற்பத்தி உள் ளிட்ட தொழில்களிலும் தொழிலாளர்களின் ஆதர வோடு வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றது.இது தவிர முன்னெப் போதும் இல்லாத அள வுக்கு அரசு ஊழியர்கள் பங்கேற்பு வெகு சிறப்பாக இருந்தது. மாவட்ட ஆட் சியரகத்தில் இருந்து கிராம நிர்வாக அலுலவர் அலு வலகம் வரை அனைத்துத் துறை ஊழியர்களும் இதில் பங்கேற்றதால் அரசுப் பணிகள் முற்றிலுமாக முடங்கின. மத்திய பொதுத்துறை நிறுவ னமான ஆயுள் காப்பீட்டு துறையும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் முழு மையாக முடங்கியது. வங்கிகள், பிஎஸ்என் எல் ஆகியவற்றில் பணி யாற்றும் ஊழியர்களும் முழுமையான வேலை நிறுத்தத்தை மேற்கொண் டனர். இது தவிர மாநில அரசின் கூட்டுறவுத் துறை, நுகர்பொருள் வாணிபத் துறை, அங்கன்வாடி, குடி நீர், ஊரக வளர்ச்சி, உள் ளாட்சித் துறை ஊழியர் கள் என அனைத்துத் துறை உழைப்பாளிகளும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழு மையாக ஈடுபட்டனர். மொத்தம் 5 லட்சம் தொழி லாளர்கள் திருப்பூர் மாவட் டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தை மகத் தான வெற்றி பெறச் செய் துள்ளனர்.ஆர்ப்பாட்டம்இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பத்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. திருப் பூரில் குமரன் நினைவகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எல்பி எப் பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செய லாளர் க.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப் பராயன், எச்எம்எஸ் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரா ஜாமணி, ஐஎன்டியுசி தலை வர் அ.பெருமாள், பிஎம் எஸ் மாவட்டச் செயலா ளர் சந்தானம் உள்ளிட் டோர் உரையாற்றினர்.இதேபோல் காங்கயத் தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் நானூறுக்கும் மேற்பட்டோரும், அவி நாசி, ஊத்துக்குளியில் தலா 200க்கும் மேற்பட்டோ ரும், பல்லடம், தாராபுரத் தில் தலா நூற்றுக்கு மேற் பட்டோரும், உடுமலை பேட்டையில் ஐநூறுக்கும் மேற்பட்டோரும் பங் கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்தாயிரம் பேர் ஆர்ப் பாட்டங்களில் பங்கேற்ற னர். இந்த ஆர்ப்பாட்டங் களில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தின் நிர்வாகிகள் பத்து அம்சக் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.கடையடைப்புஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பல் வேறு பகுதிகளில் தன்னெ ழுச்சியாக கடையடைப் பும் மேற்கொள்ளப்பட் டது. குறிப்பாக திருப்பூர் மாநகரில் பெரும்பாலான முக்கியப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட் டிருந்தன. இங்குமங்குமாக சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதேபோல் ஊத்துக்குளி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் கடை யடைப்புப் போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.திருப்பூர் மாவட்டத் தில் அகில இந்தியப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை மகத் தான வெற்றி பெறச் செய்த தொழிலாளி வர்க்கத்துக் கும், அனைத்துத் தொழிற் சங்க நிர்வாகிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி தெரிவிப்பதாக அனைத் துத் தொழிற்சங்கங்கள் சார்பில் சிஐடியு மாவட் டச் செயலாளர் எம்.சந்தி ரன் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.