திருச்சிராப்பள்ளி, பிப். 28-
அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட் டத்தையொட்டி திருச்சி யில் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்றனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி யின் பிரதான கிளை முன்பு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத் தினர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு என்சிபிஇ மண்டல செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க செயலாளர் ராமராஜ், வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் துணை பொதுச் செயலா ளர் அசோகன், வங்கி அதி காரிகள் சங்கத்தின் சார்பில் கந்தசாமி, வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் பாலச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர்.
இதேபோல் திருச்சி ஜங் சன் அருகில் உள்ள எல்ஐசி யூனிட் கிளை – 1 அலுவலக வாயிலில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், எல்.ஐ.சி மற்றும் பொது காப்பீட்டுக் கழக நிறுவனங் களின் திருச்சி கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட இணைச் செயலாளர் எல். ஜோன்ஸ் தலைமை வகித் தார். மதுரை மண்டல பொதுக் காப்பீட்டு கழக துணைத் தலைவர் ராஜமகேந்திரன் துவக்கவுரையாற்றினார். எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி கள் சங்க நிர்வாகி ஆர். ரமேஷ், எல்.ஐ.சி.ஏ.ஓ.ஐ செயலாளர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏ.எல்.ஐ.இ.ஏ கோட்ட துணைத்தலைவர் அறிவுக்கடல் நிறைவுரை யாற்றினார். எம்.ஆர்.ஜி.ஐ.ஏ துணைத்தலைவர் ஜெய ராமன் நன்றி கூறினார்.
அகில இந்திய அளவி லான இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன் டியுசி, பிஎம்எஸ், ஏஐசிசி டியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார் பில் பெல், வங்கி, இன்சூ ரன்ஸ், மின்வாரியம், அரசுப் போக்குவரத்து, அரசு விரைவு போக்குவரத்து, மத்திய பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், சாலை போக்குவரத்து, சர்க்கரை மற்றும் சிமென்ட் ஆலை கள், ஆட்டோ, சுமைப் பணி, கூட்டுறவு, ஆசிரியர், அரசுஊழியர் அமைப்புகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆர்.ராஜா, மாவட் டத் தலைவர் ஆர்.சம்பத், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முக மது அலி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் வி.கல் யாணராமன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. சுரேஷ், மாநிலச் செயலா ளர் லட்சுமணன், பிஎம்எஸ் மாவட்டச் செயலாளர் ஸ்ரீராமன், பேரவை மாநில பொதுச்செயலாளர் ஆர். நாராயணசாமி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் தேசிகன் ஆகியோர் ஆர்ப் பாட்டத்தை விளக்கிப் பேசினர்.
திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த வேலை நிறுத்த ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு ஒன் றிய அமைப்பாளர் பழனிச் சாமி தலைமை வகித்தார். ஏஐசிசிடியு பெரியசாமி, பெல் ஏஐடியுசி துணைத் தலைவர் ரவீந்திரன், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.நடராஜன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், சிஐடியு மாவட் டச் செயலாளர் கே.சி.பாண் டியன் ஆகியோர் ஆர்ப் பாட்டத்தை விளக்கி பேசி னர். முறைசாரா சங்க ஒன் றிய தலைவர் மீனா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சாலைபோக்குவரத்து, கட்டுமானம், முறைசாரா தொழிலாளர் சங்கம், பிஎச் இஎல், ஆட்டோ ஆகிய சங்கங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுவேலை நிறுத்தத்திற்கு டிஆர்இயு உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட் டம் திருச்சி டிஆர்எம் அலு வலகம் முன்பு நடைபெற் றது.
டிஆர்இயு ஜாய்சார்லஸ் தலைமை வகித்தார். ஏஐஎஸ் எம்ஏ மணிமுத்து, டிஆர் கேஎஸ் நாராயணசாமி, டிஆர்இயுவைச் சேர்ந்த ரமேஷ், தணிகாச்சலம், வெங்கடேசன், பலராமன் ஆகியோர் ஆர்ப்பாட் டத்தை விளக்கிப் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.