சென்னை, பிப். 28-
பிப்ரவரி 28 வேலைநிறுத் தம் தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. வேலை நிறுத்தத் தை வெற்றிகரமாக நடத்த உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும், ஆதரவளித்த பொதுமக்களுக்கும் சிஐடியு மாநிலத்தலைவர் ஆர்.சிங் கார வேலு, மாநில பொதுச் செய லாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ ஆகியோர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்தில் மாநில அரசு நிறு வனங்கள் மற்றும் தனியார் உற் பத்தி நிறுவனங்களில் பணியாற் றும் தொழிலாளர்களும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், மத் திய நிதி மற்றும் சேவைப் பிரிவு கள், மத்திய மற்றும் மாநில துறை களின் லட்சக்கணக்கான ஊழியர் களுமாக லட்சோப லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள அனைத்து பகுதி தொழிலாளருக்கும், ஊழியர் களுக்கும் சிஐடியு தமிழ் மாநிலக் குழு சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை துறைமுகம், தூத் துக்குடி புதிய – பழைய துறை முகம், ராணிப்பேட்டை பெல், இந் தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற் றும் ஐஓசி பாட்லிங் நிறுவனங்க ளில் முழுமையான வேலைநிறுத் தமும், திருச்சி பெல், சேலம் ஸ்டீல், ஆவடி பாதுகாப்புத்துறை உள் ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 90சதவீதம் வேலைநிறுத்தம் நடந்துள்ளது.
சென்னை சுற்றுவட்டார பகுதி களில் உள்ள டிவிஎஸ், சிம்சன், அசோக் லேலண்டு, எம்.ஆர்.எப். எவரெடி, டி.ஐ. குரூப், அட்கோ, ரானே இன் ஜின் வால்ஸ்,ரானே மோட் டார்ஸ், எல் அண்டு டி, கார்ப ரோண்டம், பவுண்டரி, கே.சி.பி., அரேவா, கப்பாரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்எஸ் எல் டிடி கே, இந்துஸ்தான் மோட்டார் லேன்சர், இந்தியன் பர்னீச்சர், டிசிஎல், பாரத் அலுமினியம் உள் ளிட்ட பெரும்பாலான உற்பத்தி நிறு வனங்களிலும் முழுமையான வேலைநிறுத்தம் நடை பெற் றது.
மாநிலம் முழுவதும் வங்கி, காப் பீட்டு நிறுவனங்கள், பிஎஸ்என் எல், மத்திய – மாநில அரசு அலு வலகங்கள், குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வருமான வரி மற்றும் மருத்துவத்துறை அலு வலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
மின்வாரியம்,அரசு போக்கு வரத்து, சிவில்சப்ளை, டாமின், பூம்புகார் கப்பல், தமிழ்நாடு மேக்ன சைட், டால்மியா மேக்னசைட் ஆகிய நிறுவனங்களிலும், பஞ்சா லைகளிலும் பெரும்பகுதி தொழி லாளர்களும், ஊழியர்களும் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் இன்ஜினியரிங், பஞ்சாலைகள், ஆட்டோ, கட்டு மானம் தொழில்களில் வேலை நிறுத்தம், வர்த்தக நிறுவனங்க ளில் கடை அடைப்பும் நடைபெற் றுள்ளன.
திருப்பூரில் பனியன், விசைத் தறி, பாத்திரம் தயாரிப்பு தொழில் களில் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது.
ஓசூரில் டிவிஎஸ், லேலண்டு உள்ளிட்ட கேந்திரமான நிறு வனங்களில் வேலைநிறுத்தம் முழுவதுமாக நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி, பஞ்சாலை, தோட்டம் மற்றும் முறைசாரா பிரிவுகளில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45 தோல் தொழிற் சாலை களில் முழுமையான வேலை நிறுத்தமும், 60சதமான ஆட் டோக்களும் ஓடவில்லை.
சேலம் மாவட்டத்தில் மேட் டூர் அனல்மின்நிலையம் கட்டுமானம், அரசுப்போக்குவரத்து, மின்சாரம், சாலை போக்குவ ரத்து, அங்கன் வாடி, ஆட்டோ, கூட்டுறவு, துப் புரவு ஊழியர்கள், ஏற்காடு தோட் டத்தொழிலாளர்கள் என அனைத்து பகுதி தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மற்றும் வேலூ ரில் 1 லட்சம் பீடித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உப்பளத்தில் முழுமையாக வும், தனியார் உப்பளத்தில் 40 சதமானமும் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயி லை தோட்டத்தொழிலில் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். அங்கன்வாடி ஊழியர்கள், ஊட்டி நகராட்சி ஊழியர்கள் பெரும்பகுதியினர் கலந்து கொண் டனர். பந்தலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
முறைசாரா பிரிவுகளான கட்டு மானம், தையல், ஆட்டோ, சுமைப் பணி, கைத்தறி, பீடி போன்ற தொழில்களில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை
வடசென்னையில் அண்ணா சாலை மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட வேலைநிறுத்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஏஐடியுசி துணைத்தலைவர் எஸ்.எஸ். தியாகராஜன், தொமுச தலைவர் செ.குப்புசாமி, பிஎம்எஸ் துரைராஜ், ஐஎன்டியுசி இளவரி, ஏஐடிசிசி டியு ஜவகர், ஏஐயுடியுசி சிவக் குமார், எச்எம்எஸ் சுப்பிரமணி உள் ளிட்ட தலைவர்கள் பேசினர். சிஐ டியு மாநில நிர்வாகிகள் எல்.சுந்தர ராஜன், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், கே.திருச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்சென்னையில் சைதாப் பேட்டையில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ.சவுந் தரராசன் எம்எல்ஏ, ஏஐடியுசி துணைத்தலைவர் ஏ.எம்.கோபு, தொமுச பேரவை பொதுச்செயலா ளர் பி.சண்முகம் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர். சிஐடியு மாநில நிர்வாகிகள் எஸ்.அப்பனு, டி.ஏ.லதா ஆகியோர் பங்கேற்றனர்.
நாகர்கோவிலில் சிஐடியு மாநி லத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, ஈரோட்டில் சிஐடியு செயலாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர்கள் வி.குமார்(திருவள் ளூர்), ஆர்.கருமலையான்(சேலம்), ஜி.சுகுமாறன்(திருப்பூர்) ஆகியோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
இந்த வேலைநிறுத்த ஆர்ப் பாட்டத்தில் சேலம் – 4000, திருப் பூர் – 3000, திருவாரூர் -3000, மதுரை – 2000 , கிருஷ்ணகிரி -3000, கடலூர் – 2500, ஈரோடு – 1700, திண்டுக்கல் -1500 , திரு வள்ளூர் -1000, வேலூர் – 2500, திருநெல்வேலி 1300, விழுப்புரம்-1000, கன்னியாகுமரி-2500 என அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங் களில் ஒரு லட்சம் பேர் பங்கேற் றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.