திருச்சிராப்பள்ளி, பிப்.28-
பொறியியல் கல்லூரி களுக்கு இடையிலான தட கள விளையாட்டுப் போட் டிகள் திருச்சி ஜே.ஜே. பொறியியல் கல்லூரியில் தொடங்கின.
நிகழ்ச்சிக்கு ஜே.ஜே. கல்விக்குழும தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். தடகள விளை யாட்டுப் போட்டிகளை டாடா ஸ்டீல் முதன்மை மேலாளர் (விளையாட்டு) சார்லஸ் புரோமியோ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜே.ஜே. பொறி யியல் கல்லூரி முதல்வர் சத்தியமூர்த்தி, செயல் இயக் குநர் சிவசங்கரன், உடற் கல்வி இயக்குநர் ஜெய ராஜா, தடகள சங்க செய லாளர் அண்ணாவி உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர் களின் அணிவகுப்பு, ஒலிம் பிக் ஜோதி ஏற்றுதல் ஆகி யவை இடம்பெற்றன.
தடகளம் பெண்கள் பிரிவு 3 ஆயிரம் மீட்டரில் நாமக்கல் செல்வம் கல்லூரி யை சேர்ந்த கோமதி 11.29.5. (புதிய சாதனை) நாமக்கல் பாவை கல்லூரி வசந்தி, செல்வம் கல்லூரி பாரதி ஆகியோரும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஜோசப் கல் லூரி பூர்விகா, செல்வம் கல்லூரி கோமதி, ஜோசப் கல்லூரி கவிதா ஆகியோ ரும், குண்டு எறிதலில் கேள வாக்கம் எஸ்எஸ்என் கல் லூரி குணசுந்தரி, சென்னை ஜோசப் கல்லூரி தளவபாளை யம் கார்த்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: