தஞ்சாவூர், பிப்.28-
பத்துக்கோடிக்கும் அதிக மாக முறைசாராத் தொழிலாளர் களுக்கு சமூக பாதுகாப்பை ஏற் படுத்தவேண்டும்; வங்கி உள் ளிட்ட பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விடும் முயற்சியை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய பொது வேலைநிறுத்தம் பிப்ரவரி 28 செவ்வாயன்று நடைபெற்றது.
சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, பி.எம்.எஸ். உள் ளிட்ட 11 மத்திய தொழிற்சங் கங்கள், 7 வங்கி, எல்ஐசி ஊழி யர் அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை நிறுவ னங்கள் நடத்திய இப்போராட் டம் முழு வெற்றிபெற்றது.
அரசு ஊழியர்கள்
தஞ்சை மாவட்டத்தில் 3200 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங் கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் வி.கோபால்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத் திலும் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் ஆர்.பன்னீர் செல் வம், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலை வர் ஆர்.தமிழ்மணி ஆகியோர் உரையாற்றினர்.
ஆசிரியர் அமைப்பு
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தஞ்சை கல்வி மாவட்டத்தில் 125 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர். மாவட்டச் செயலாளர் என்.குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
வங்கி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலைநிறுத்தப் போராட்டத் தால் வங்கி சேவை முற்றிலு மாக முடங்கிப்போனது. நிக் கல்சன் வங்கி முன்பு ஆர். பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவ பிரதிநிதிகள்
மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் தஞ்சை, திரு வாரூர், குடந்தை, பட்டுக் கோட்டை போன்ற இடங்க ளில் ஆயிரம் பேர் பங்கேற்ற னர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏ.ஆர்.ஆர். சீவல் தொழிற் சாலை, மைதீன் புகையிலை தொழிற்சாலை, ஜெயஸ்ரீ இன்ஜி னியரிங் ஆகியவற்றில் முழு வேலைநிறுத்தம் நடைபெற் றது. மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்து, சாலைப் போக் குவரத்து, ஆட்டோ ஓட்டுநர் கள், கட்டுமானம், சுமைப் பணித் தொழிலாளர்கள் மற்றும் முறைசாராத் தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய- மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.
தொழிலாளர்களின் பேரணி
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக புறப்பட்ட தொழிலாளர்களின் பேரணி கீழவாசல் ஆப்ரஹாம் பண்டி தர் சாலை வழியாக தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நிறை வடைந்தது. அங்கு ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங் கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இப்பேரணி ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன், ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் சி.சந்திரகுமார், எல்.பி.எப். மாவட்டச் செயலாளர் கு.சேவி யர் ஆகியோர் தலைமை தாங் கினர். சிஐடியு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் த.முருகேசன், இ.டி.எஸ்.மூர்த்தி, பி.செல்வந் திரி, ஏ.ஜெயராஜ், ஏ.கண்ணன், பி.செந்தில்குமார், பி.மூர்த்தி, துரை. சகிக்குமார், பி.முருகன், எஸ்.ஞானசேகரன், கே. ரமேஷ், என்.சிவகுரு, ஆர். சுரேஷ், மின்சாரம் சங்கர், பேர்நீதி ஆழ்வார் ஆகியோரும் ஏஐடியுசி சார்பில் என்.சந்தா னம், ஆர்.மதிவாணன், ஏ. சேவையா, து.கோவிந்தராஜ், செல்வம், சேகர், மூர்த்தி, விஜ யலெட்சுமி ஆகியோரும் எல்.பி.எப். சார்பில் அன்பரசு, ஆர்.ஜெயவேல், டி.முருகானந் தம், ஜெகதீஸ், ஏ.ரெகுபதி, காளி முத்து, கோவிந்தராஜ், பேச்சி முத்து, விஜயகுமார், உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
எல்ஐசி
ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கத்தின் சார் பில் தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட 27 கிளைகள்,காரைக் கால் உள்ளிட்ட 13 சாட்டி லைட் கிளைகள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 1000 ஊழியர் கள் வேலைநிறுத்தப் போராட் டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் தஞ்சை கோட்டம் முன்பு கோட்டத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பொதுச்செயலாளர் எஸ்.செல்வராஜ், லிகாய் ஸ்ரீதர், வளர்ச்சி அதிகாரிகள் சங்க தலைமை நிலைய செயலாளர் அரசு ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: