போர்ச்சுக்கலில் கடுமையான பொருளாதார நெருக் கடி ஏற்பட்டுள்ள சூழலில் அந்நாடு யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பிரபல பொருளாதார நிபுணரும், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்றவரு மான பால் கிரக்மேன், தொடர்ந்து யூரோ மண்டலத்தில் போர்ச்சுக்கல் நீடிப்பதற்குத்தான் 75 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளன. அநேகமாக, கிரீஸ் இதிலிருந்து வெளியேறி விடலாம் என்று கூறியுள்ளார்.
* * *
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பள்ளி மாணவன் சுட்டதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். சுட்டதாகச் சொல்லப்பட்ட மாணவனைக் காவல்துறையினர் தங்கள் வசம் எடுத்துள்ளனர். சுட்டதற்கான காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. மறுபுறத்தில், இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்று பெற்றோர்களில் பலர் கவலையுடன் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
* * *
கடந்த ஆண்டு இரண்டு நாடுகளாக சூடான் பிரிந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து சர்ச்சைகள் இருந்து வருகின்றன. தெற்கு சூடானின் மீது படை யெடுக்கவும் தயங்க மாட்டோம் என்று சூடான் ஜனாதிபதி யின் ஆலோசகர் முஸ்தபா உஸ்மான் இஸ்மாயில் கூறி யுள்ளார். எல்லையில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் தெற்கு சூடானுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் புகார் செய்யப்போவதாகவும் சூடான் அரசு அறிவித்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: