சென்னை, பிப்.28-தமிழகத்தில் சமூநீதிப் போராட்ட இயக்கம் ஓரள வுக்கேனும் வெற்றி பெற்றி ருப்பதிலும், பலர் தங்களது சாதிப்பெயரைப் பெயரின் பின்னால் ஒட்டுவதைத் தவிர்த்ததிலும் திராவிட இயக்கத்திற்கு ஒரு வரலாற் றுப் பாத்திரம் உண்டு. திரா விட இயக்கத்தின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் இதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. அதே நேரத்தில், சுயமரியாதையைப் பாது காக்க வலியுறுத்திய விழா மேடையில், அந்த இயக்கம் வெறும் தனிமனித வழிபாடு களிலும் கொள்கைச் சமர சங்களிலும் அடையாளமி ழந்து வருகிற சோகத்தை யும் காண முடிந்தது.திராவிட இயக்க நூறாம் ஆண்டு தொடக்கவிழா சென்னையில் திங்களன்று (பிப்.27) நடைபெற்றது. திமுக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நிறைவுரை ஆற்றிய அக்கட்சியின் தலை வர் கருணாநிதி, கல்வியிலும் அரசுப் பணிகளிலும் குறிப் பிட்ட சாதியினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையைமாற்றி, மற்ற சமூ கங்களைச் சேர்ந்தவர்களும் இன்று உள்ள அளவிற்கு வருவதற்குக் காரணம் திரா விட இயக்கத்தின் போராட் டம்தான் என்று கூறினார்.திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலகட் டத்தில் பட்டப்படிப்புகளி லும், அரசு வேலைகளிலும் பிராமணர்கள் மட்டுமே மிகப்பெருமளவிற்கு இருந் தது குறித்த புள்ளிவிவரங் களை அளித்தார். அச்சுறுத்தல்கள்“நாம் நடத்திய போராட் டங்களால், தந்தை பெரியா ரும், பேரறிஞர் அண்ணா வும், சமூக நீதி காவலர் களும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களு டைய உயர்வுக்காக பாடு பட்டதன் காரணமாகத் தான் இன்று ஓரளவுக்கு நாம் நிமிர்ந்திருக்க முடி கிறது. இதையும் அழிப்ப தற்கு எல்லாப் பக்கங்களிலு மிருந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. அதைப்பற்றி கவலைப்படாமல் பெரி யார், அண்ணா பாதையில் இயக்கத்தை நடத்திச் செல்ல வேண்டும்,” என்றார் அவர். “ஒரு கருணாநிதி போனால் பல கருணாநிதிகள் வரு வார்கள்” என்று கூறிய அவர், திராவிட இயக்கம் தொடர்ந்து வலுப்படுத்தப் பட வேண்டும் என்றும் கூறினார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த திமுக பொதுச்செய லாளர் அன்பழகன், “சுயமரி யாதையைக் காப்பாற்றிக் கொண்டால் நிமிர்ந்து நடப் போம். மற்றவர்களை தாழ் வாகக் கருதாமல் இருப்ப தும், மூட நம்பிக்கைகளை வளர்க்காமல் இருப்பதும் சுயமரியாதைதான்,” என் றார்.மனுதர்மமும் திராவிடமும்திராவிட கழகத் தலை வர் கி. வீரமணி, “இன்னா ருக்கு இது என்று வரை யறுத்தது மனுதர்மம். அனை வருக்கும் அனைத்தும் என்று முழங்கியது திராவிட இயக் கம்,”என்றார். ஒரு காலகட் டத்தில் சென்னையில் ஒரு நாடக அரங்கின் வாயிலில், கட்டணங்கள் பற்றிய அறி விப்போடு ‘பஞ்சமர்களுக்கு இடமில்லை’ என்று தடை விதிக்கப்பட்டதை குறிப் பிட்ட அவர், “இன்று யாரா வது அப்படிச் சொல்ல முடி யுமா,” என்று கேட்டார்.உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன், சமூக நீதி வளர்ச்சியோடு சேர்ந்து இயக்கமும் வளர்ந்திருக் கிறது; இன்னும் வளர வேண்டும் என்றார். பேராசிரியர் மா. நன்னன், திராவிட இயக்கம் கடந்து வந்த பாதையை வரலாற்று நோக்கோடு பதிவுசெய்வதற் கான ‘அரிமா நோக்கு ஆயம்’ அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இயக்கத்தில் செயல்படுகிற அனைவரும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.திராவிட தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் பேரா சிரியர் சுப. வீரபாண்டியன், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கோட் பாட்டை ஏற்றுக்கொள்கிற எவரும் திராவிடரே, ஏற்க இயலாதவர்கள் ஆரியரே என்றார். சாதி மத வேறு பாடுகளையும், பெண்ணடி மைத்தனத்தையும் எதிர்ப் பது திராவிட இயக்க அடை யாளம் என்றார் அவர். முன்னதாக திமுக பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.தடம் விலகல்திராவிட இயக்கம் மற்ற இயக்கங்களைப்போல தலைவர்களால் உருவாக் கப்பட்டதல்ல. எரிமலை போல, நிலநடுக்கம்போல இயற்கையான இயக்கம் அது என்று கூறிய நன்னன், “வேண்டுமானால் பொது வுடைமை இயக்கத்தை வேண்டுமானால் இயற்கை யானது என்று கூறலாம்,” என்றார். பிறகு, திமுகவுட னான உறவை இடதுசாரி கட்சிகள் முறித்துக்கொண் டதும் இயற்கையானது தான் என புரிந்துவிடுமே என்று கருதினாரோ என் னவோ, “நான் இங்கே உள்ள பொதுவுடைமை இயக்கங் களைச் சொல்லவில்லை,” என்பதாக சொல்லி வைத் தார். பகுத்தறிவு, சமூக சீர் திருத்தம், பெண்ணுரிமை, பிராமணிய எதிர்ப்பு, சமூக நீதி குறித்தெல்லாம் தலை வர்கள் பேசினார்கள். உரை கள் வரலாற்றுத் தகவல்க ளோடும் ஒரு மீட்சிக்கான தாகத்தோடும் இருந்தன. ஆனால், மேடையில் உரை யாற்ற அமர்ந்திருந்த அத் தனை பேரும் ஆண்கள். பெரி யாரின் முக்கிய இயக்கம் பெண் விடுதலை. ஒரு பெண் அறிஞர் கூடவா அது தொடர் பாகப் பேச அகப்பட வில்லை?வரலாற்று நூல்களைப் படிப்பது, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொள்வது போன்ற சிந்தனைகள் வலியுறுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. லட்சியங்களுக்காகப் பயன்படுத்த ஆட்சியதிகா ரத்தைப் பிடிப்பது என்பதி லிருந்து விலகி, பண வேட்டை, பதவி மோகம் என தடம் மாறிப்போன பயணத்தை மீண்டும்தடத்தில்ஏற்றாமல், இந்த லட்சியங்கள் நிறை வேறுமா என பொதுவான திராவிட இயக்க ஆதரவா ளர்கள் தங்களுக்குள் உரை யாடிக்கொண்டனர் .-அ.குமரேசன்

Leave A Reply