டமாஸ்கஸ், பிப்.28 –
புதிய அரசியலமைப்புச் சட்டத் தின் நகலுக்கு சிரியாவின் பெரும் பான்மையான மக்கள் ஆதரவு தந்து வாக்களித்திருக்கிறார்கள்.
பல்வேறு சீர்திருத்தங்களை இணைத்து அஸாத் தலைமை யிலான சிரியா அரசு மக்கள் முன் பாக புதிய நகல் அரசியலமைப்புச் சட்டத்தை வைத்தது. அதன்மீது பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட் டுள்ளது. வாக்களித்தவர்களில் 89.4 சதவீத வாக்காளர்கள் சீர்திருத்தங் களைக் கொண்ட புதிய அரசியல மைப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். மேற்கத்திய நாடுக ளின் ஆதரவு பெற்று குழப்பங்க ளைச் செய்து வரும் எதிர்க்கட்சி கள் இந்த வெற்றியை விமர்சித்துள்ளன.
மொத்தம் 83 லட்சத்து 76 ஆயி ரத்து 447 வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்காளர்களில் 57.4 சத விகிதம் வாக்குகள் பதிவு செய்யப் பட்டன. அதில் புதிய சீர்திருத்தங் கள் அடங்கிய நகல் அரசியலமைப் புச் சட்டத்திற்கு 74 லட்சத்து 90 ஆயிரத்து 319 பேர் ஆதரவாக வாக் களித்தார்கள். எதிராக 7 லட்சத்து 53 ஆயிரத்து 208 பேர்(9 சதவிகிதம்) தங்கள் வாக்குகளைப் பதிவு செய் தனர். 1.6 சதவிகித வாக்குகள் செல் லாதவையாகின.
அந்நிய சக்திகளின் ஆதரவோடு இயங்கிவரும் பயங்கரவாதக்குழுக் களின் மிரட்டல்களை மீறியே 57 சதவிகித மக்கள் வாக்களித்திருக்கி றார்கள். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்போது ஜனாதி பதியாக இருக்கும் பஷர் அல் அஸாத்தின் பதவிக்காலம் 2014 ஆம் ஆண்டுடன் நிறைவு பெறும். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மக் கள் மத்தியில் இயங்கும் வாய்ப்புகள் உருவாகிறது. ஏற்கெனவே இயங் கிக் கொண்டிருக்கும் அரசியல் கட் சிகளுக்குக் கூடுதலான அரசியல் அதிகாரங்கள் கிடைக்கிறது.
இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் பற்றிக் கருத்து தெரிவித்த சிரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் அல் மோலம், சிரியா மக்களின் வாழ்வில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். சிரியா ஒரு புதிய கட்டத்தை நோக் கிப் பயணிக்கிறது. இன்றைய தினம், புதிய ஜனநாயக அத்தியாயத்தை நோக்கிச் செல்கிறோம். மேலும் வலுவான சிரியா உருவாகும் என்று குறிப்பிட்டார்.
புதிய சட்டம் பற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிர தமர் அடெல் சபர், சில அரசியல் கட்சிகள் சீர்திருத்தங்களை விரும்ப வில்லை. சில கட்சிகள் அதைப் பற் றியெல்லாம் கவலைப்படுவதேயில் லை. மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசியலமைப்புச்சட்டம் மதிப்ப ளித்துள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.