கோவை, பிப். 28- கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அமிர்தா சூரிய காந்த் என்பவருக்கு சொந் தமான பண்ணைத் தோட் டம் உள்ளது. இவர் வெளி நாட்டில் இருப்பதால் இந்த பண்ணைத்தோட் டத்தை பரமசிவன் என்ப வரும்,அவரது மகன் பூவண் ணனும் கவனித்து வந்த னர். இவர்கள் தோட்டத் தில் 25-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்த னர்.இந்த நிலையில் தோட் டத்தில் சுற்றி வந்த 25 நாய் கள் ஒன்றன் பின் ஒன்றாக செத்து விழுந்தன. மேலும் தோட்டத்தில் 3 காகங்க ளும் செத்து விழுந்தன. உணவில் யாராவது விஷம் கலந்து வைத்திருக்கலாம் என்றும் அதை சாப்பிட்ட நாய்களும்,காகங்களும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இது குறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Leave A Reply