கோவை, பிப். 28-கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவையொட்டி கோவையில் இன்று போக் குவரத்து மாற்றப்பட்டுள் ளது.கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம் மன் கோயில் தேரோட் டம் இன்று (புதன்) மாலைநடக்கிறது. இதையொட்டிஇன்று மதியம் போக்குவரத் தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. பாலக்கேடு ரோட் டில் இருந்து உக்கடம் வழி யாகநகருக்குள் வரும் அனை த்து வாகனங்களும் வாலா ங்குளம் மேம்பாலம் வழி யாகவோ, பேரூர் பைபாஸ் ரோடு வழியாகவோ செல்ல வேண்டும். அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் மற் றும் லங்கா கார்னரில் இருந்து பாலக் காடு செல் லும் அனைத்து வாகனங்க ளும் கூட்ஸ் ஷெட் ரோடு, பெரியகடை, வீதி, வின்செ ன்ட் ரோடு வழியாக உக்க டம் செல்ல வேண்டும். பேருந் துகள் மட்டும் டவுன் வழியாக உக்கடம் செல்ல லாம். டவுன் ஹலில் இருந்து வைசியால் வீதிக்கோ ,ஒப்பணக் கார வீதிக்கோ செல்ல அனுமதி இல்லை.அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தில் இருந்து தடாகம் ரோடு, மேட்டுப் பாளைம் ரோடு செல்லும் வாகனங்கள், லாரிகள், மற் றும் மினி லாரிகள் சுக்கிர வார்பேட்டை வழியாக செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக புரூக் பாண்ட் ரோடு வழி யாக செல்ல வேண்டும்.மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் புரூக்பாண்ட் ரோடு வழி யாக அவினாசி ரோடு பழைய மேம்பாலம் வந்து செல்ல வேண்டும்.தடாகம் ரோட்டில் இருந்து பாலக்காடு செல் லும் அனைத்து வாகனங் களும் பொன்னையராஜ புரம், சொக்கம்புதூர், ராம மூர்த்தி பாதை வழியாக சிவாலயா தியேட்டர், பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்ல வேண்டும். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பேருர் பை பாஸ் ரோடு வழியாக உக் கடம் அடைந்ததும் சிவா லயா தியேட்டர், ராம மூர்த்தி பாதை, சொக்கம் புதூர், காந்தி பார்க் வந்து செல்ல வேண்டும்.லாரி போக்குவரத்தை பொறுத்த வரை பிற்பகல் 12 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராஜவீதி, ரங்கேகவுடர் வீதி, இடை யர் வீதி, தாமஸ் வீதி, ஒப் பணக்கார வீதி, வைசியாள் வீதி, பெரிய கடை வீதி, கருப்ப கவுண்டர் வீதி ஆகிய சாலைகளில் நுழைய தற்காலிக தடை உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் வழக்கம் போல் நகர எல் லைக்குள் வந்து செல்ல லாம் என மாநகர போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தெவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: