சேலம், பிப். 28-குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷ ணம் மாணவிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ஒரு பெண் 18 வயதுக்குள்ளும், ஒரு ஆண் 21 வயதுக்குள்ளும் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். எனவே குழந்தை திருமணம் நடைபெற் றால் கடிதம் மூலமாகவோ?, தொலைபேசி மூல மாகவோ (1098, 0227-2420464, 2431213, 2400200) தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி எக்காரணம் கொண்டும் வெளியிடப் படமாட்டாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவை யான அனைத்து ஆலோசனைகள், கல்வி வசதி, தேவைப்பட்டால் விடுதி வசதியும் இலவசமாக அளிக்கப்படும். எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரி வித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: