புதுதில்லி, பிப். 28-
கூட்டாட்சி அரசியலமைப்பு வடி வத்திற்கு எதிராக தேசிய தீவிரவாத தடுப்பு மையம் உள்ளது என காங் கிரஸ் அல்லாத முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த மையம் செயல்படுவதை காலவரையறையின்றி மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மாநில அரசுகளின் கலந்தாலோ சனை ஏதும் இல்லாமல், மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் வகையில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் (என்சிடிசி) மார்ச் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என, மத் திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு காங்கிரஸ் அல்லாத முதல்வர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலை யில், மார்ச் 10ம் தேதி அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுடன் கூட்டம் நடத்தி, பின்னர் உரிய முடிவு எடுக்கப்படுகிறது.
தீவிரவாத தடுப்பு மையத்திற்கான இயக்குநர் மற்றும் 3 இணை இயக்குநர் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. காங்கிரசின் கூட்டாளியான மேற்குவங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜியும் தீவிரவாதத் தடுப்பு மையத்திற்கு எதிர்ப்புத் தெரி வித்தார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையப் பணிகள் குறித்து, அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் மற்றும் தீவிரவாத தடுப்பு அமைப்புகளின் தலைவர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்து, உரிய முடிவு எடுக்க வேண் டும் என 10 மாநில முதல்வர்கள், கடந்த வாரம் உள்துறை அமைச்சர் ப.சிதம் பரத்திற்கு கடிதம் எழுதினர்.
தீவிரவாத தடுப்புப் பணிகளுக்கு அத்தியாவசியமான மிகச்சிறிய அதி காரங்களுடன், மையம் கொண்டுள் ளது என சிதம்பரம் விளக்கம் அளித் தார்.
மாநிலங்களின் அதிகாரத்தில் உத்தேசிக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு மையம் எந்தவிதத்திலும் தலையிடாது என, பிரதமர் மன்மோகன் சிங் இமாச்சலப்பிரதேச முதல்வர் பிரேம்குமார் துமாலுக்கு, கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: