காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசுக்கு 10 கோடி தொழி லாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். உழைக்கும் மக்களுக்கு எதிரான நாசகர தாராளமய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட வேண்டும் என்று உரத்து முழங்கியிருக் கிறார்கள்.இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான பொது வேலைநிறுத்தப் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய வரலாற்றில் இத்தனை பெரும் பொது வேலைநிறுத்தம் இதுகாறும் நடந்ததில்லை. இன்னும் குறிப்பாக ஆளும் கட்சி தொழிற்சங்க மும், பிரதான எதிர்க்கட்சியின் தொழிற்சங்கமும், இடதுசாரி தொழிற்சங்கங்களும், பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளின் தொழிற்சங்கங் களும் ஒரே குரலில், முதல்முறையாக பொது வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளன என்பதை கவனிக்கவேண்டும். உலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக் கடிச் சேற்றில் சிக்கித் தவிக்கிறது. தன்னை மீட்டுக்கொள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது முன்னெப்போதையும்விட கொடூரமான தாக்கு தல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. வரலாறு நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களின் தியாகத்தாலும், கோடிக்கணக்கான தொ ழிலாளர்களின் உறுதிமிக்க போராட்டத்தாலும் வென்றெடுத்த உரிமைகள் அத்தனையையும் காலில் போட்டு மிதிக்கிறது. உலக மக்கள் தொகையில் மிகப்பெருவாரி யான இடத்தினைப் பெற்றிருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் மீது நடத்தப்படும் இந்தத் தாக்கு தலை எதிர்த்து உலகம் முழுவதிலும் எழுச்சி மிகு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும்பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால் தாக்கப்படுவது கட்சி வேறுபாடின்றி அனைத்துப்பகுதி தொழிலாளர்களுமே என் பதை உணர வைத்து, கடந்த 2 ஆண்டு கால மாக இந்திய தொழிற்சங்க மையம் உள்ளிட்ட இடதுசாரி தொழிற்சங்கங் களின் முன் முயற்சி யோடு, ஐஎன்டியுசி, பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற் சங்கங்களையும் போராட்டக் களத்தில் இணை த்து நாடு தழுவிய பிரச்சாரம், இதுவரையிலும் கண்டிராத அளவிற்கு சிறைநிரப்பும் போராட்டம் என அடுத்தடுத்து ஒன்றுபட்ட எழுச்சியை நிரூ பித்தது இந்தியத் தொழிலாளி வர்க்கம்.இதன் முத்தாய்ப்பாக பிப்ரவரி 28 பொது வேலைநிறுத்தம் தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.வெகு சில பெரும் முதலாளிகள் மற்றும் கார்ப் பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக கொள் கைகளை வகுக்கும் கோமான்கள், உழைக்கும் வர்க்கம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை உணர்ந்துசெயல்படவேண்டும்.தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் தாராளமயக் கொள்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். ஆனால் ஏகாதிபத்திய சக்திகளோடு கை கோர்த்துக்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற்கான சந்தையாக இந்திய தேசத்தை மாற்றிக் கொண்டுவருகின்ற மன்மோகன்சிங் அரசு, தனது பயணத்தை அதே பாதையில் தொடருமானால், ஒன்றுபட்டு நிற்கும் தொழிலாளி வர்க்கம் இன்னும் உக்கிரமாக எழுந்துநிற்கும்; தனது வாழ்வைப் பறிக்கும் முதலாளித்துவ அரசுக்குப் பாடம் புகட்டும்!

Leave A Reply

%d bloggers like this: