சென்னை, பிப்.28-புதிய பென்சன் திட்டத் திற்கு எதிர்ப்பு, காலிப் பணி யிடங்களை நிரப்பக் கோரு தல் உள்ளிட்ட கோரிக்கை களுக்காக பிப்ரவரி 28 செவ் வாயன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் 60லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பங்கேற் றுள்ளனர் என்று அகில இந்திய மாநில அரசு ஊழி யர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந் தரம் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவற்றை நடத்தியுள்ளனர். மாநில அரசு ஊழியர்களின் இந்த உணர்வைப் புரிந்து கொண்டு புதிய பென்சன் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன் றில் கூறியுள்ளார்.வருவாய்த்துறை ஊழியர்கள்தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.சிவக் குமார், மாநில பொதுச்செய லாளர் கு.முருகன் ஆகி யோர் விடுத்துள்ள அறிக் கையில், தமிழ்நாட்டில் வரு வாய்த்துறை அலுவலர்கள் 90 சதவீதம் அளவிற்கு வேலைநிறுத்தத்தில் பங் கேற்றுள்ளனர். வட்டப் பொறுப்பு, வட்டாட்சியர் கள் முதல் அனைத்து நிலை ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்றுள்ளனர். அவர் களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரி வித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.அரசு ஊழியர்கள்தமிழகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் கள் முழுமையாகவும், வணிக வரிப் பணியாளர்கள், தொழிற் பயிற்சிஅலுவலர்கள், நீதித் துறை ஊழியர்கள், மருத் துவத்துறை ஊழியர்கள், சமூகநலத்துறை ஊழியர் கள், சர்வேத்துறை ஊழியர் கள், தொழில்நுட்ப ஊழி யர்கள், கல்வித்துறை ஊழி யர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் , அதன்வழிகாட்டுதலின்படி இயங்கி வரும் 60க்கும் மேற் பட்ட துறைவாரிச் சங்கங் களின் ஊழியர்களும் பெரு மளவில் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் அரசு ஊழியர்கள், ஆசியர்கள், பொதுத்துறை ஊழியர் சங் கங்கள் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்க ளும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பேரணி, ஆர்ப் பாட்டம், மறியல் போன்ற பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு மத்திய- மாநில அரசுகளுக்கு தங் களது எதிர்ப்பையும் எச் சரிக்கையையும் தெரிவித் தனர். முழுமையாக பங் கேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் இரா.பாலசுப்ர மணியன் ஆகியோர் பாராட் டும் நன்றியும் தெரிவித்துள் ளனர்.மின் ஊழியர்கள்வேலைநிறுத்தத்தில், மின் வாரியத்தில் உள்ள சிஐ டியு, தொ.மு.ச., ஐ.என். டி.யு.சி., பிஎம்எஸ், தமிழ் நாடு மின்துறை பொறி யாளர் அமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பொறியாளர்கள், அதிகாரி கள், களத் தொழிலாளர் கள், அலுவலக ஊழியர்கள் உட்பட சுமார் 25000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்குபெற்றுள்ளனர். மின் வாரிய வரலாற்றில் நடை பெற்ற வேலைநிறுத்தத்தில் அதிகமாக பங்குகொண் டது இந்த வேலைநிறுத் தமே. பல மின் வாரிய அலு வலகங்கள், தொழிலாளர் கள் எவரும் இன்றி, ஏ.இ.க் கள் மட்டுமே பணிக்கு வந் தனர். மின்வாரிய அலுவல கங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. கட்டண வசூல் மையங்களும் முழுமையாக இயங்கவில்லை.இந்த மகத்தான வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் அனைவருக்கும் மின்வாரிய கூட்டுக்குழு சங்கங்கள் சார் பாக எஸ்.எஸ். சுப்ரமணி யன் (சிஐடியு), சிங்கார இரத் தின சபாபதி (எல்.பி.எப்), டி.வி. சேவியர் ( ஐ.என்.டி. யு.சி), என்.சந்திரன் (பிஎம் எஸ்), டி.அறிவழகன் (மின் வாரிய பொறியாளர் அமைப்பு) ஆகியோர் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த் துக்களையும் தெரிவித்துள் ளனர்.எல்.ஐ.சி-யில்முழு வேலைநிறுத்தம் எல்.ஐ.சி ஊழியர்களும், வளர்ச்சி அதிகாரிகளும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இணைந்த தால் தமிழகம், புதுவை, கேரளாவில் உள்ள 275 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட் டன. இம்மாநிலங்களில் உள்ள 13 கோட்டத் தலைமை அலுவலகங்களிலும், சென் னையில் உள்ள தென் மண் டலத் தலைமை அலுவல கம் முன்பாகவும் நூற்றுக் கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.உலகம் முழுவதும் பன் னாட்டு தனியார் நிதி நிறு வனங்கள் திவாலாகியும், நெருக்கடிக்கு ஆளாகியும் வருகிற வேளையில் இந்திய நாட்டின் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முத லீட்டை உயர்த்துவதை எதிர்த்தும், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங் களின் பங்கு விற்பனையை கைவிடக் கோரியும், மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை களை வலியுறுத்தியும் இவ் வேலை நிறுத்தத்தில் பங் கேற்றதாக தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் பொதுச் செய லாளர் க.சுவாமிநாதன் தெரி வித்துள்ளார். எல்.ஐ.சியில் கடந்த வாரம் நிரந்தர பணி நியமனம் பெற்ற தற்காலிக ஊழியர்கள் 5000 பேரும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோழிக் கோடு, எர்ணாகுளம், பாலக் காடு,கோட்டயம் போன்ற பகுதிகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் மூடிக் கிடந்தன. எல்.ஐ.சி முகவர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத் திருந்ததால் நூற்றுக் கணக்கான முகவர்கள் அலு வலகங்கள் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டங்க ளிலும் பங்கேற்றனர். சென் னையில் புதிதாக துவங்கப் பட்டுள்ள பொது இன்சூ ரன்ஸ் முகவர் சங்கமும் வேலைநிறுத்த ஆர்ப்பாட் டங்களில் பங்கேற்றது. தமி ழகம், கேரளாவில் 10000 க்கும் மேற்பட்ட எல்.ஐ.சி. ஊழியர்களும்,2500 வளர்ச்சி அதிகாரிகளும் பங்கேற் றுள்ளனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்மண்டலப் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன், எஸ்.ரமேஷ் குமார், ஜெய ராமன், சென்னை அண்ணா நகர் கோட்ட அலுவல கத்தில் தனசெல்வம், மனோ கரன், கும்பகோணத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன் னாள் தலைவர் என்.எம். சுந்தரம், கோழிக்கோடு கோட்ட அலுவலகத்தில் தென்மண்டலத் தலைவர் குன்னி கிருஷ்ணன் ஆகி யோர் உரையாற்றினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.