புதுதில்லி, பிப். 28-
2012 லண்டன் ஒலிம்பிக் கில் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு புரவலராக இருக்க கூட்டுறவு நிறுவனங்களின் வைரமாக இருக்கும் அமுல் நிறுவனம் இசைந்துள்ளது.
புதுதில்லியில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் விழாவில் அமுல்நிறுவனத்தின் சார் பில் அதன் நிர்வாக இயக்கு நர் ஆர்.எஸ்.சோதியும், இந் திய ஒலிம்பிக் அமைப்பின் செயலாளர் நாயகமும் சர்வ தேச ஒலிம்பிக் அமைப்பின் உறுப்பினருமான ராஜா ரண்தீர் சிங்கும் கையெழுத் திட்டனர்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிறுவனம் ‘அமுல்’ என்ற பெயரில் பால் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கிறது.
இந்தியாவில் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்த அமுல் உறுதிபூண்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுக ளில் பங்கேற்க வரும் இந் திய இளைஞர்களுக்கு அமுல் ஊக்கம் அளிக்கும். லண்டன் செல்லும் ஒலிம் பிக் குழுவுக்கு ‘ஒலிம்பிக் கூட்டாளி’ என்ற முறையில் புரவலராக அமுல் இருக்கும் என்று கூறுவதில் மகிழ்ச்சி யும், பெருமையும் அடைவ தாக ஆர்.எஸ்.சோதி கூறி னார்.
ஐஓஏ தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் வி.கே.மல்ஹோத்ரா அமுலின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததுடன், புரவலர் கள் அளிக்கும் நிதி வீரர் களுக்குப் பயன்படுத்தப் படும் என்று கூறினார்.
தன்னுடைய ஒலிம்பிக் முனைப்பை தொடக்கி வைத்த அமுல் நிறுவனத் தை பாராட்ட விரும்புவதாக ராஜா ரண்தீர்சிங் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: