புதுதில்லி: 1984ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவா யுக் கசிவினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான இந்தியர் களுக்கும் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் நிவாரணம் அளிப்பதற்கு டவ் கெமிக் கல் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
உயிரிழந்து, உறுப்பு களை இழந்து விஷவாயு வின் பாதிப்பைத் தலை முறை தலைமுறையாகச் சுமந்து வரும் மக்களுக்கு நிவாரணம் கோரி 28 வருடங்களாகப் போராடி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் தலை வர்களையும் ஸ்ட்ராட்ஸ்ஃ போர் என்னும் சர்வதேச உளவு நிறுவனத்தின் மூலம் டவ் கெமிக்கல் நிறுவனம் வேவு பார்த்து வந்துள்ளது என்ற தகவலை விக்கிலீக்ஸ் திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ளது.
இதற்கான முதல்கட்ட செய்தி சேகரிப்பில் டவ் நிறுவனம், யூனியன் கார் பைடு நிறுவனம் குறித்து, இந்தியாவிலும் வெளிநாடு களிலும் வெளிவந்த தொலைக்காட்சி, இணைய தளம் மற்றும் அச்சில் வெளிவந்த செய்திகளைச் சேகரிப்பது.
நிவாரணம் கோரிப் போராடி வரும் தலைவர்க ளின் தனிவாழ்க்கை, அவர் களுக்கு நிதியுதவி அளிப்ப வர்கள், விளம்பர உத்திகள், பத்திரிகைச் செய்திக் குறிப்பு கள், தகவல் பலகைகள் மற் றும் பேஸ்புக்,ட்விட்டர் மூலம் ஆதரவு தெரிவித்தவர் கள் அனைவரைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து, டவ் கெமிக்கல் நிறுவனத் திற்கு ஸ்ட்ராட்ஸ்ஃபோர் உளவு நிறுவனம் அறிக்கை அளித்து வந்துள்ளது.
ஸ்ட்ராட்ஸ்ஃபோர் உளவு நிறுவனம், பெரு நிறு வனங்களின் அக்கிரமங்க ளுக்கு எதி ராகப் போராடி வருபவர்கள் குறித்து விரிவா கவும் பிறர் அறியாத வகை யில் ரகசியமான முறையி லும் திரட்டி அறிக்கை அளித்து வந்துள்ளது.

Leave A Reply