பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பணியிடங்களில் காண்ட்ராக்ட் மயத்தை கைவிட வேண்டும், முறைசாரா தொழிலாளர் தேசிய நிதியம் உருவாக்க வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும், தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பிப்ரவரி 28 செவ்வாய் அன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இப்போராட்டம் தமிழகத்தில் முழு வெற்றி பெற்றது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: