இட்டாநகர், பிப். 28-
அருணாச்சல் பிரதேசத் தில் கீழ் சுபான்ஸ்ரீ மாவட்டத் தில் யாசாலி பகுதியில் ஓடும் கல் பங்கி நதியில் புதிய வகை மீன்களை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர். மீன்கள் வளர்ந்த நதியின் பெய ரடங்கும் வகையில், அவற் றுக்கு கர்ரா கல்பங்கி என்று பெயரிட்டுள்ளனர்.
மணிப்பூர் பல்கலைக் கழ கத்தின் கே.நெபேஸ்வர், கென் சும் பக்ரா, அருணாச்சல் பிர தேச பல்லுயிரி பெருக்கி ஆணையம், டி.என்.தாஸ் ராஜீவ்காந்தி பல்கலைக் கழகம் ஆகியோர் ஆராய்ச்சி யில் ஈடுபட்டனர்.
வனவிலங்கு மற்றும் பரா மரிப்பு இதழான ஜர்னல் ஆப் திரட்டன்ட் டக்சா என்ற நூலின் பிப்ரவரி 2012 இதழில் வெளி யாகியுள்ள கட்டுரையில் இந் தக் கண்டுபிடிப்பு இடம் பெற் றுள்ளது.

Leave A Reply