கோவை, பிப்.28-மத்திய தொழிற்சங்கங் களின் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழி யர்கள் மற்றும் தொழிலா ளர்கள் திரளாக பங்கேற்ற தால் செவ்வாயன்று நாடு முழுவதும் பணிகள் ஸ்தம் பிக்கப்பட்டு அரசு அலு வலகங்கள் மற்றும் தொழிற் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண் டும். பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை தனி யாருக்கு விற்பனை செய் வதை கைவிட வேண்டும். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. இதன்படி, செவ்வா யன்று ( பிப்.28) நாடு முழு வதும் அனைத்து தொழிற் சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் வணிக நிறுவனங் கள் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டன.கோவைகோவையில் மாநில அரசு அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலு வலகம், வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மற்றும் நீதி மன்றங்கள் உள்ளிட்ட பல் வேறு துறை அலுவலக ஊழியர்கள் ஒட்டுமொத்த மாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்கார ணமாக மாவட்டம் முழுவ தும் உள்ள அரசு அலுவல கங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் செஞ் சிலுவை சங்கம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் கள் சங்கத்தின் தலைமை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சந்திரன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலச்செயலா ளர் என்.அரங்கநாதன் சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்டச் செயலா ளர் எஸ்.மதன் மற்றும் நிர் வாகிகள் டி.சிவஜோதி, என்.சுகுமார், வி.செந்தில் குமார், கு.கவிதா, குர்ஷித் பேகம், எஸ்.குமார் உள் ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றி னார். இந்த ஆர்ப்பாட்டத் தில் நூற்றுக்கும் மேற் பட்ட பெண் ஊழியர்கள் உள்ளிட்ட நானுற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். இதேபோல், மத்திய அரசு அலுவலகங்களான கோவை பிஎஸ்என்எல் முதன்மை தொலைப்பேசி அலுவலக ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத் தப் போராட்டத்தில் பங் கேற்றதால் அலுவலகம் வெறிச்சோடிக் காணப் பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் வாடிக்கை யாளர் சேவை மையம் ஆகியவை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட் டத்தின் காரணமாக திறக் கப்படாமல் பூட்டிக் கிடந் தன. இதேபோல் ரோஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ஊழி யர்கள் வேலை நிறுத்தம் செய்து வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கோவை திருச்சி சாலை யில் உள்ள ஆயுள் காப்பீட் டுக்கழக மண்டல அலுவல கம், அவிநாசி சாலையில் உள்ள பீளமேடு கிளை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அனைத்து ஊழியர்களும் முழுமை யாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மேலும். திருச்சி சாலை மண்டல அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்த கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய இன்சுரன்சு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர். ஆலைகள் – கடைகள் மூடல்கோவை ஆவாரம்பா ளையம், பீளமேடு, இடை யபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவை இயங் கவில்லை. இதேபோல், கோவையில் உள்ள வர்த் தக நிறுவனங்கள், கடை கள் மற்றும் காட்டூர், ஒப் பணக்காரவீதி, ராஜவீதி, திருச்சி சாலை, ஆவாரம் பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இன்ஜினியரிங் உதிரிபாகக்கடைகள் உள் ளிட்டவைகள் பரவலாக மூடப்பட்டிருந்தன. இதேபோல், அனைத்து ஆட்டோ தொழிற்சங் கங்களும் வேலை நிறுத்தத் தில் முழுமையாக பங் கேற்றதால் பெரும்பா லான ஆட்டோக்கள் ஒட வில்லை. வேன், கால்டாக் சிகள் உள்ளிட்வைகள் இயக்கப்படவில்லை.சேலம்சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஞ் சாலைகள் மற்றும் விசைத் தறி, கைத்தறி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றதால் அப்பணி கள் முற்றிலும் செயல் படவில்லை. இதேபோல், சேலம் உருக்காலை மற் றும் டால்மியா மேக்ன சைட் தொழிலாளர்கள் அனைவரும் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத்து தொழிலா ளர்கள் பெரும் பகுதியினர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் பேருந்துகள் இயக்கப் படாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. ரயில்வே கூட்செட், செவ்வாய் பேட்டை, லாரி மார்க் கெட் உள்ளிட்ட மாவட் டம் முழுவதும் உள்ள சுமைப்பணி தொழிலாளர் களின் ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்தின் கார ணமாக பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும், மேட்டூர் அனல்மின் நிலையம், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், மருந்து விற் பனை பிரதிநிதிகள், கட்டு மானம், அங்கன்வாடி, ஆட்டோ, அரசு போக்கு வரத்து, கூட்டுறவு, உள் ளாட்சி ஊழியர்கள், துப் புரவு பணியாளர்கள், ஏற் காடு தோட்டத் தொழிலா ளர்கள், செயில் ரிப்ராக் டரி, தமிழ்நாடு மேக்ன சைட், இன்சுரன்ஸ்,வங்கி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள் என மாவட் டத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும். காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம் மேளனம். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த திரளான ஊழியர் கள் சேலம் கோட்டை மைதானத்திலிருந்து ஊர் வலமாக புறப்பட்டு ஆட்சி யர் அலுவலகம், வள்ஞவர் சிலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு வேலை நிறுத்தத்தை விளக்கி பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் இ.கோபால், பழனி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.சுகு மார், தென்மண்டல இன் சுரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் ஆர்.தர்மலிங் கம், பொது இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சி. கண்ணன், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் எஸ். முரளி மற்றும் சுந்தரம், எஸ்.கணபதி, ஜே.நேதாஜி, சாமிநாதன், எம்.முருகே சன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த முந் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங் கேற்று நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நீதிமன்ற ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் இமயவரம்பன் மற்றும் நிர்வாகிகள் கயல்ராலை, ராஜேந்திரன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதே போல் சங்ககிரி, மேட் டூர், ஆத்தூர், எடப்பாடி உள் ளிட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட் டத்தில் கலந்து கொண்ட னர். இந்த வேலை நிறுத் தப்போராட்டத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள 54 துறைகளை சேர்ந்த ஊழி யர்கள் கலந்து கொண்ட தால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பிக்கப்பட்டு வெறிச் சோடிக் காணப்பட்டது. மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள துறை வாரி அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர் களும் முழுமையாக பங் கேற்றனர். ஆத்தூரில் அகில இந் திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார் பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஏஐடியுசி மாவட்ட துணைதலைவர் கோவிந்த சாமி தலைமை தாங்கி னார். இதில் சிஐடியு சார் பில் டி.செல்வக்குமார், எஸ்.சின்னையன். ஏஐடி யுசி சடையன், எல்பிஎப் பிச்சமுத்து, ஓய்வுபெற் றோர் சார்பில் இல.கலை மணி, பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் குமாரசாமி, ஹரிஹரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, எம். பொன்னுசாமி, எல்ஐசி வைரமாணிக்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் மாதேஸ் வரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். ஈரோடுஈரோடு வ.உ.சி பூங்கா விலிருந்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார் பில் நடைபெற்ற பேர ணியை ஏ.ஐ.டி.யு.சி நிர்வா கியும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ந.பெரியசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு அகில இந்தியச் செயலாளர் மாலதி சிட்டிபாபு, ஈரோடு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட உதவித் தலைவர் ப. மாரிமுத்து, வி.தொ.ச மாவட்ட தலைவர் கே. துரைராஜ், ஐ.என்.டி.யு.சி மாவட்டத் தலைவர் தங் கராஜ், தொ.மு.ச. நிர்வாகி ஜோ. சுந்தரம், ஏ.ஐ.சி. சி.டி.யு. நிர்வாகி கோவிந்த ராஜ், பி.எம்.எஸ். நிர்வாகி மணிகண்டன் உள்ளிட் டோர் முன்னிலை வகித் தனர். இப்பேரணி பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை உள்ளிட்ட பகுதி கள் வழியாக டெலிபோன் பவன் முன்பாக நிறை வடைந்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில் மத்திய – மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 600-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கமிட்டனர்.பெருந்துறைபெருந்துறை புதிய பேருந்து நிலையத்திலி ருந்து துவங்கிய ஊர்வலம் அண்ணா சிலை பகுதியில் முடிவடைந்தது. இதைய டுத்து அங்கிருந்த கே.வி.பி. வங்கியின் முன்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி நிர்வாகி சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி, மாவட்ட உதவித் தலைவர் ஜி. பழ னிச்சாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் சின்னசாமி மற்றும் மத்திய – மாநில அரசு ஊழியர் சங் கங்களின் நிர்வாகிகள் மற் றும் தொழிலாளர் உட்பட சுமார் 250-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மேலும் பெருந்துறை பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தப் போராட் டத்தில்கலந்து கொண்ட னர். இதனால் பெருந்துறை பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட் டிருந்தன. மேலும் சிப் காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் உள்ள சி.ஐ.டி.யு உள்ளிட்ட பல் வேறு தொழிற்சங் களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் திர ளாக கலந்து கொண்டனர்.சென்னிமலைசென்னிமலையில் பேருந்து நிலையம் முன் பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட துணைச் செய லாளர் கே.ரவி, எஸ்.பால கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள் செங்கோட் டையன், பொன்னுசாமி, ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் ஜெகநாதன், கே.பழனி சாமி, பி.எம்.எஸ். நிர்வாகி ரவி ஆகியோர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இந்த அகில இந்திய வேலை நிறுத்தத் திற்கு ஆதரவாக சென்னி மலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பவானிபவானி பேருந்து நிலை யம் முன்பாக துவங்கிய தொழிலாளர் பேரணி வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக நிறைவு பெற் றது. பின்னர் அங்கு நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட உதவித் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். சி.ஐ. டி.யு நிர்வாகிகள் பி.பி. பழ னிசாமி, மாணிக்கம், எஸ்.வி. மாரிமுத்து, கட்டு மான தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஆர். முருகேசன், ஏ.ஐ.டி. யு.சி நிர்வாகி எஸ்.பி. முனி யப்பன், ஐ.என்.டி.யு.சி. நிர் வாகி திருமுருகன், மாரி முத்து, தொ.மு.ச நிர்வாகி கள் எம்.பி. முருகேசன், ஆர். சண்முகம் ஆகியோர் உட்பட மத்திய – மாநில அரசு ஊழியர்கள் என சுமார் 400க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.கோபிகோபி தாலுகா அலுவ லகம் முன்பாக நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி டி.ராஜன் தலைமை வகித்தார், இதில் வட்டக்கிளை செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் தசரதன், ராஜசேகரன், மணிபாரதி, சுந்தர்ராஜன், பழனிசாமி, டி.என். பழனி சாமி, வேலுச்சாமி, முரு கேசன், சி.ஐ.டி.யு நிர்வாகி கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் ஆகியோர் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண் டனர்.சத்தியமங்கலம்சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி எல்.ஐ.சி. அலுவல கம் முன்பாக நிறை வடைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ .டி.யு நிர்வாகி எஸ்.ஏ. ராம் தாஸ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு நிர்வாகிகள் கே.எம். விஜயகுமார், கே.மாரப்பன், உமா மகேஸ்வரி, ஏ.ஐ.டி.யு.சி நிர் வாகி ஸ்டாலின் சிவக் குமார், தொ.மு.ச நிர்வாகி கரியப்பன், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன் னிலை வகித்தனர். இதில் மத்திய – மாநில அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரை சேர்ந்த நானுற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.நீலகிரிநீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் எஸ்டேட்களில் பணி புரியும் தோட்டத் தொழி லாளர்கள் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.உதகையில் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.குமார் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தை சிஐடியு சங் கத்தின் மாவட்டச் செய லாளர் எல்.தியாகராஜன் துவக்கி வைத்து உரை யாற்றினார். இதில் நாகேஸ் வரன், முத்துக்குமார். சேகர் உள்ளிட்டோர் வேலை நிறுத்தக் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் பல்வேறு துறை களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் எல்ஐசி, எச்பிஎப், அங்கன்வாடி, ஸ்டெர்லிங் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், உதகை நகராட்சியில் பணி யாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு சங்கத்தின் ஆல் தொரை, ஐஎன்டியுசி சங் கத்தின் தலைவர் பழனி ஆகியோர் தலைமை தாங் கினர். இதில் விவசாய சங் கத்தின் குந்தா கிளை செய லாளர் மாதேவன் மற்றும் பழனி, ருத்ரா, சித்தன், ஈர குட்டி, சுப்பிரமணி, ராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடுமலைஉடுமலையில் உள்ள மத்திய பேருந்து நிலையத் திலிருந்து சிஐடியு சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பி னர் என்.கிருஷ்ணசாமி தலைமையில் ஐநூற்றுக் கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பங்ககேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணி தபால் நிலை யம் முன்பு நிறைவடைந்து வேலை நிறுத்தக் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் ஐஎன்டியுசி சங்கத்தின் சார்பில் சக்தி வேல், காதர், ஏஐடியுசி ரணதேவ், பிஎம்எஸ் நாக ராஜ், எல்பிஎப் நாக மாணிக்கம் மற்றும் நாக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.