ஹைதராபாத், பிப். 28-
இந்தியாவின் மூன்றாம் நிலை அணுமின் நிலையத் திட்டத்தை மூழ்கடிக்க கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என நாட்டின் உயர் அணுமின் திட்ட நிபுணர்கள் கூறினர்.
ஹைதராபாத்தில் அணு எரிபொருள் தரக்கட்டுப் பாடு வகை குறித்த மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் கழக நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி ஆணையத் தலைவர் (ஏஇசி) ஸ்ரீகுமார் பானர்ஜி செய்தியாளர்களி டம் கூறுகையில், அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு, தரம், சுகாதா ரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போதும் எரி பொருள் மறுசுழற்சி குறித்து கேள்வி எழுப்பு கிறார்கள் என்றனர்.
டாக்டர் ஜெயின் கூறு கையில், கூடங்குளம் அணு மின்நிலையக் கட்டுமானம் 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் ஒற்றுமையுடன், சுமூகமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகு ஷிமா (ஜப்பான்) அணுமின் நிலைய விபத்து குறித்து எழுந்த அச்சம் குறித்து கூடங்குளம் மக்களுக்கு விளக்கப்பட்டு சுமூகநிலை ஏற்பட்டது. ஆறு மாதத் திற்கு பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் புகுஷிமா பிரச்சனை அங்கு தலைதூக் கியது எப்படி?
அணுமின்நிலைய பாது காப்பு குறித்து துவங்கிய போராட்டம், தற்போது அணு மின்சாரம் தேவை யில்லை என்கிற திட்டத் துடன் நடக்கிறது என்றார்.
கடந்த சில வாரங்களாக அணுமின் நிலைய பாது காப்பு குறித்து கேட்கப்பட வில்லை. அணுமின் திட்டத் தில் மறுசுழற்சி மற்றும் இரண்டாவது நிலை குறித்தே உள்ளது. அதிவேக ஈனூலைக்கு புளூட்டோனி யம் எங்கே தயாரிக்கப்ப டும்? என கேள்விக் கேட் கிறார்கள். இது இந்திய அணுமின் திட்டத்தின் மீதான தாக்குதல். அணு தொழில்நுட்பத்தில் உல கின் தலைமையாக, தோரி யம் அணு உலை திட்டத்திற் குச் செல்ல விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் மறு சுழற்சி ஆலை இல்லை. இந்த நிலையில், மறுசுழற்சி பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2032ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணுமின் உற்பத்தியை 63 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு உள்ளது. இதில் இறக்குமதி செய்யப் படும் அணு உலைகள் மூலம் 35 ஆயிரம் – 40 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது என ஜெயின் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.