புதுச்சேரி, பிப். 27-
வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக மருந்து விற்பனை பிரதிநிதிகள் புதுச்சேரியில் தெருமுனைப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
குறைந்தபட்ச மாத ஊதி யம் ரூ.10ஆயிரம் அறிவிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பத்து அம்சகோரிக் கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் செவ் வாய்கிழமை (பிப். 28) நடை பெறும் வேலைநிறுத் தத்தை புதுச்சேரியில் வெற்றி பெறச் செய்யகோரி மருந்து விற் பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் தெருமுனைப்பிரச் சாரம் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்திற்கு மருந்து விற்பனைபிரதிநிதி கள் சங்கத்தின் புதுச்சேரி கிளைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சிஐ டியு மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், குணசேகரன், கிளைசெயலாளர் சதிபாபு, சந்துரு, சுந்தரராஐன் உள் ளிட்டோர் பேசினார்கள். தலைமை தபால் நிலையம், சின்னமணிகூண்டு, நேரு வீதி, முத்தியாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.