வேகமாக செல்லும் வாகனங்களை
கண்டுபிடிக்க எஸ்.எம்.எஸ்
சென்னை, பிப். 27-
சென்னையில் வேகமாக கார்-மோட்டார் சைக்கிள் மோதி பலர் காயம் அடைவதுடன் சில சமயங்களில் உயி ரிழப்பும் ஏற்படுகிறது.
விபத்து நடைபெறும்போது வண்டியின் நம்பரை குறித்து வைத்து போலீசாரிடம் தகவல் தெரிவித்த பிறகு ஆர்.டி.ஓ. அலுவலகம் மூலம் வண்டியின் முகவரியை பெறு வது வழக்கம். இதை மிகவும் எளிமைப்படுத்தும் வித மாக போக்குவரத்து துறை புதிய நடைமுறையை அமல் படுத்த உள்ளது. விபத்து ஏற்படுத்தும் வண்டி நம்பரை செல் போனில் எஸ்.எம்.எஸ். மூலம் போக்குவரத்து துறைக்கு அனுப்பினால் உடனே வண்டியின் முழு முக வரியும் நமக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் விசாரணையை துரிதப் படுத்த முடியும். இதுமட்டுமின்றி பழைய வாகனங்களை வாங்கும் போது அதன் உண் மையான உரிமையாளர் யார்? முகவரி என்ன? என்ஜின் நம்பர் போன்ற விவரங்களையும் எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு நடந்து வருவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இதற்கான எஸ்.எம்.எஸ். நம்பர் விரைவில் அறிவிக்கப் படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார். புதிய எஸ்.எம்.எஸ். முறை மூலம் வண்டி ஓட்டும் இளம் பெண்களின் வீட்டு விலாசத்தை கண்டு பிடிக்க இதில் வழிவகை உள்ளதால் இதை எப்படி கையாள் வது என்றும் ஆலோசிப்பதாக அதி காரிகள் கூறினர்.
————————-
தங்க மூலாம் பூசி போலி நகை விற்கும் கும்பல் கைது
சென்னை, பிப். 27-
சென்னை புறநகர் பகுதியில் வட மாநில கொள்ளை யர்கள் பதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தீவிர ரோந்துக்கு காவல்துறை ஆணையர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி எம்.கே.பி. நகர் உதவி ஆணை யர் கோவி மனோகரன் மேற்பார்வையில் கொடுங்கை யூர் ஆய்வாளர் நாகராஜ், உதவி ஆய்வாளர்கள் தேவராஜ், மகேந்திரன், ஜெயராமன் ஆகியோர் ரோந்து வந்தனர். அப்போது கிருஷ்ண மூர்த்தி நகரில் ஒரு வட மாநில பெண்ணும், 2 வாலிபர்களும் ஒரு வீட்டின் முன் நின்று நகைகளை வைத்து விலை பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறை யினர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த தால் போலி நகைகளை பேரம் பேசி குறைந்த விலைக்கு விற்க முயற்சி செய்ததும் 3 பேரும் தங்க மூலம் பூசிய போலி நகை விற்கும் கும்பல் என்றும் தெரியவந்தது. இதை யடுத்து அவர்களை கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ தங்க முலாம் பூசிய போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட பெண்ணின் பெயர் ராதா. மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர். மற் றொருவர் அவரது மகன் வீரு (30), உறவினர் கண்ணையா (19) .இவர்கள் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
————————-
2 ஆயிரம் சோலார் மின் விளக்குகள் அமைக்க டெண்டர்
கோவை, பிப். 27-
கோவையில் மின்சார பற்றாக்குறையைப் போக்க 20 ஆயிரம் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை அதிகரித்துள்ள தால் (சேலார்) சூரிய மின் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 2 ஆயிரம் சோலார் மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. மாநில அளவில் 20 ஆயிரம் தெரு மின்விளக்குகள் அமைக்கப் படும். இதற்கான இறுதி டெண்டர் மார்ச் 16ம் தேதி செய் யப்பட்டுள்ளது. இதனால் பசுமை வீடு திட்டத்தில் கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங் களில் 5 ஆயிரம் வீடுகளில் சோலார் மின்விளக்கு கள் அமைக்கப்படவுள்ளன.
இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை மற்றும் எரிசக்தி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், சோலார் மின் விளக்கு திட்டத்தில் பசுமை வீடுகளில் சிறு குழல் விளக்குகள் பயன்படுத்தப்படும். வீடுகளில் 20 வாட்ஸ் திறன் உள்ள விளக்குகள் அமைக்கப்படும். சோலார் தெரு விளக்கு திட்டத்தை டெண்டர் எடுக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் பராமரித்து, செயல்படுத்த வேண்டும். மேலும் வன விளங்குகளின் நடமாட்டம் அதிகமாக
உள்ள மலை கிராமங்களில் சோலார் விளக்குகள் பய
னுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: