சென்னை, பிப். 27-
மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு, திங்களன்று (பிப். 27) முதல் அமலுக்கு வந்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 4 மணி நேர மின்வெட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேர மாக இருந்தபோதே 8 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. தொழில்துறைகள் 50 சதவீத வருவாய் இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள் ளன. தினமும் 11,500 முதல் 12 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்கள், மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்கள் மூலம் 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. நாளொன் றுக்கு 4 ஆயிரம் மெகாவாட் மின்சா ரம் பற்றாக்குறையாக உள்ளது.
இதனால் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில மாதங்க ளாக வரலாறு காணாத மின்வெட்டு நீடிக்கிறது. கிராமப்புறங்களில் 10 மணி நேரம் வரையும் நகராட்சி, மாநக ராட்சி பகுதிகளில் சுழற்சி முறையில் 8 மணி நேரமும் மின்தடை செய்யப் பட்டது. அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்ட இரண்டு மணி நேரம் தவிர பகலில் 3 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுத்தப்பட் டது. இதனால் தொழில்துறையின ரும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவ தும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மின் பற்றாக்குறையால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபத்தை சமாளிக்க வழி தெரியாமல் மின்வாரி யம் தவித்து வருகிறது. இதை தவிர்ப் பது குறித்து கடந்த 17 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி னார்.
இதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சீரான மின்தடை ஏற்படுத்தவும், தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை விடவும் அரசு தீர்மானித்தது. அதன்படி, புதிய மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள் ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மின்வெட்டு திட்டம் திங்களன்று (பிப். 27)அமலுக்கு வந்தது. சென்னை யில் 2 மணி நேரமும், மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரமும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென் னையில் முதல்முறையாக 2 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட் டுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது.
வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்தடை இருக்கும் என்றும் புதிய மின்வெட்டு மூலம் 1,200 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 1ம் தேதி முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின் விடுமுறை அமல்படுத்தப் பட உள்ளது. ஞாயிறு தவிர, மற்ற 6 நாட்களுக்கு 6 மண்டலங்களாக பிரிக் கப்பட்டு சுழற்சி முறையில் தொழிற் சாலைகளுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்.
இதன்படி, ஈரோடு மண்டல தொழில் நிறுவனங்களுக்கு திங்கள் கிழமையும், சென்னை தெற்கு மண்ட லம், திருப்பத்தூர் பகிர்மான வட்டத் துக்கு செவ்வாய், சென்னை வடக்கு, மதுரை மண்டலத்துக்கு புதன், கோவை மண்டலம் திருப்பூர், நீலகிரி பகிர் மான வட்டம் தவிர்த்து பிற பகுதி களுக்கு வியாழன், நெல்லை மண்ட லம் மற்றும் திருப்பூர், நீலகிரி மின் பகிர்மான வட்டத்துக்கு வெள்ளிக் கிழமை, திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் மண்டலம் திருப்பத்தூர் பகிர் மான வட்டம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சனிக் கிழமைகளில் மின் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் சிறு மற் றும் குறுந் தொழில்கள் பெரிதும் பாதிக் கப்படும். இதனால் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்படும் என தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply