சங்கரன்கோவில் தொகுதி : தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர் நியமனம்
திருநெல்வேலி, பிப். 27 –
சங்கரன் கோவில் தொகுதிக்கு கூடுதலாக ஒரு உதவி தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது.
ஏற்கனவே சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தலை கண்காணிக்க 3 பார்வை யாளர்கள் நியமிக் கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.
//அடுத்த செய்தி//
5 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை:
சிபிசிஐடி போலீஸ் விசாரணை துவக்கம்
சென்னை, பிப். 27 –
சென்னை பெருங்குடி பரோடா வங்கி, கீழக்கட் டளை வங்கிகளில் கொள் ளையடித்த 5 கொள்ளையர் கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபி சிஐடி போலீசார் விசார ணையை துவக்கியுள்ளனர்.
இந்த என்கவுன்ட்டர் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பின் னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் திங்களன்று தங்களது விசாரணையைத் தொடங்கினர்.
சிபிசிஐடி போலீஸ் டிஜிபி நரேந்திரபால்சிங் மேற்பார்வையில் ஐஜி மஞ்சுநாத், எஸ்பி ராஜேஸ் வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.