லண்டன், பிப்.27-
சாராய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனம் ரூ.6300 கோடி கடனில் தவிக் கிறது. இந்த நிறுவனம் கடனி லிருந்து மீண்டுவர 2 அயல்நாட்டு விமான நிறுவனங்களுடன், விஜய் மல்லையா பேச்சு வார்த்தை நடத்துகிறார். பிரிட் டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உரிமையாளரான இண்டர்நேஷ னல் ஏர்லைன்ஸ் குரூப் (ஐஏசி) உள்பட இரண்டு நிறுவனங்க ளுடன் பேச்சுவார்த்தை நடக் கிறது.
கிங்பிஷர் விமான நிறுவனத் தில் மல்லையாவிற்கு 58 சதவீதம் பங்குகள் உள்ளன. அயல்நாட்டு நிறுவனத்திற்கு பங்குகளை மாற்றித்தருவது குறித்து, ‘தி டைம்ஸ்’ இதழுக்கு விஜய் மல் லையா கூறுகையில், அயல் நாட்டு நிறுவன உரிமையாளர் பங்குகளை வாங்குவது தொடர் பான கட்டுப்பாடுகளை நீக்கு வதற்கு, மத்திய அரசிடம் தற் காலிக அனுமதியைப் பெற்றுள் ளேன் என தெரிவித்துள்ளார்.
விதிமுறைகள் மாற்றம் வெளி யானதும், சில நாட்களில் அயல் நாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனத்தில் முதலீடு செய்யும் என அவர் தெரிவித்தார்.
விதிமுறை தளர்வின் மூலம் இந்திய விமான நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகளை, அயல் நாட்டு நிறுவனம் பெறும். ஐக் கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த எடிஹாட் விமான நிறு வனமும், கிங்பிஷருடன் கூட்டுச் சேர விரும்புகிறது. கடனில் உள்ள கிங்பிஷர் மீண்டுவர உட னடித் தேவையாக 1600 லட்சம் டாலர் முதலீடு தேவைப்படு கிறது.
கிங் பிஷர் நிறுவனம் 64 விமானங்களை இயக்கிவந்தது. தற்போது 28 விமானங்களை மட்டுமே இயக்குகிறது. இந்நிறு வனத்தில் இருந்த விமானிகள் பெருமளவு விலகிவிட்டனர். கிங்பிஷர் பாலைவனமாக இருக் கிறது.

Leave A Reply

%d bloggers like this: