மே.பாளையம்,பிப்.27-
ரூ.10கோடி செலவில் தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் மேட்
டுப்பாளையம் வந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்
பட்டுள்ள இந்த மலை ரயிலில் பயணம் செய்து இயற்கை எழிலை ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மேட்
டுப்பாளையம் வருகிறார்
கள்.
நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கும் இந்த மலை ரயில் அடிக்கடி பழுதாகி நடுக்காட்டில் நின்று விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் நடுக்
காட்டில் சிக்கி தவிப்பது தொடர் கதையாகிறது.
இதை தடுக்க சுவிஸ் நாட்டில் இருந்து ரயில் என்ஜின் வாங்க முயற்சி நடந்தது.ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திருச்சி பொன்
மலை ரயில்வே பணிமனை
யில் 4 புதிய என்ஜின்கள் தயாரிக்க ரூ40 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.10 கோடி
யில் தயாரிக்கப்பட்ட முதல் என்ஜின் மேட்டுப்
பாளையம் கொண்டுவரப்
பட்டது. இதிலும் பல்
வேறு கோளாறுகள் ஏற்
பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ரயில்வே பொறியாளர்கள் குறை
களை நீக்கி 2-வதாக புதிய என்ஜினை வடி
வமைத்துள்ளனர்.
மாற்றி அமைக்கப்
பட்ட புதிய என்ஜின் திருச்சில் இருந்து மேட்டுப்
பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டு ராட்சத கிரேன் உதவியோடு இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய என்ஜின் மூலம் மலை ரயில் பல முறை வெள்ளோட்டம் விடப்படும் என்றும், பின்
னர் இதனை வழக்கமான பயணிகள் மலை ரயிலில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த
னர். புதிய என்ஜின் 54 டன் எடை கொண்டதாகும். இது பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் வகையில் வடி
வமைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பெட்
டிகள் இணைக்கப்படும் என்று சுற்றுலா பயணி
கள் எதிர்பார்ப்பில் உள்ள
னர்.

Leave a Reply

You must be logged in to post a comment.