2030ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகிவிடும் என்று உலகின் பெரிய எரிபொருள் நிறுவனமான பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறியுள்ளது. அப்போது முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் இருக்கும் என்று கூறியுள்ள அந்த நிறுவனம், மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்தாலும் அதன் எரிபொருள் தேவையில் 4.5 சதவிகிதம் குறைந்துவிடும் என்கிறது. சீனாவும், இந்தியாவும் உலகின் மக்கள் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் எரிபொருள் தேவை ஆகியவற்றில் 35 சதவிகிதத்தைக் கொண்டவையாக 2030ல் இருக்கும். எரிவாயுத் தேவையில் 47 சதவிகிதத்தையும், எண்ணெய்த் தேவையில் 91 சதவிகிதத்தையும் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை அடைந்துவிடும் என்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கணித்திருக்கிறது.

Leave A Reply