முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்தி
ரேலியாவுடனான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா சரணடைந்தது. ஆஸ்திரேலியா 87 ஓட்டங்களில் வெற்றி
பெற்றது.
ஆஸ்திரேலியாவில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் வங்கி முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வரு
கின்றன. ஆஸ்திரேலியா ஏழு ஆட்டங்களில் 19 புள்ளிகள் எடுத்து இறுதிக்குள் நுழைந்துள்ளது.
நாணயச் சுண்டலில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. பிரவீன் அருமையான தொடக்கம் தந்தார். வாட்
சனையும் பாரஸ்டையும் அவர் வெளியேற்றினார். மைக்
கேல் ஹஸ்ஸி ரன் அவுட் ஆனார். வார்னரும், டேவிட் ஹஸ்ஸியும் தலா ஒரு அரைச்சதம் அடித்து அணியை நிலைப்படுத்தினர். வாடேயும் ஒரு ஐம்பதை அடித்தார். உமேஷ் யாதவும் சேவக்கும் அபாரமாகப் பந்து வீசி ஓட்
டங்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய வீரர்கள் சொதப்பினர். சேவக் அதிரடி மாய
மாகி பல மாதங்களாகிவிட்டன. டெண்டுல்கர் நூறாவது நூறை எண்ணியபடி ஆடுவதால் தவறுகளை இழைக்
கிறார். தொடக்கங்களின் மேல்கட்ட முடியாமல் காம்பீ
ரும் கோலியும் வெளியேறினர். ரெய்னா இந்தியாவில் புலி, வெளியில் எலி என நிரூபித்தார். தோனி தொட்டதெல்லாம் பொன்னான காலம் மலையேறிவிட்டது. இந்திய இன்
னிங்சில் அஸ்வின்தான் (26) டாப்ஸ்கோரர். இந்தியா 39.3. ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.