முக்கிய சுற்றுகளில் இந்தியா
ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் கூடைப்பந்து போட்டிகளின் முக்கிய சுற்றுகளுக்கு இந்தியா தகுதி பெற்றது. ஞாயிறன்று நடந்த கடைசி சுழல் போட்டியில் இந்தியா 63-31 என்ற புள்ளிகளில் வங்க தேசத்தை வென்றது. நான்கு அணிகள் ஆடிய சுழல் போட்டிகளில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்தது.
இந்தியா ஏற்கனவே நடந்த சுழல் ஆட்டங்களில் நேபாளத்தையும் இலங்கையையும் தோற்கடித்துள்ளது.
இந்தியா வெளியேறியது
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டிகளில் இந்திய ஆடவர், மகளிர் அணியில் கால் இறுதியில் தோற்று வெளியேறின. இந்திய ஆடவர் அணி 2-3 என்ற போட்டிகள் கணக்கில் தைபே அணியிடம் தோற்றது. மகளிர் அணி 0-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்றது.
ஐந்து முதல் எட்டு இடங்களுக்கான போட்டியில் இந்திய ஆடவர் வடகொரியாவிடம் 1-3 எனத் தோற்றது. மகளிர் அணி சைனீஸ் தைபே அணியிடம் 0-3 எனத் தோற்றது. அடுத்த போட்டியில் வடகொரியாவிடம் தோற்ற மகளிர் அணி 8ம் இடத்தைப் பிடித்தது.

Leave A Reply

%d bloggers like this: