கோவை, பிப். 27-
தமிழகத்தில் மாசிப்
பட்டத்தில் பயிரிடப்படும் பருத்தியின் விலை சீராக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்
கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்
கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்
கப்பட்டுள்ளதாவது,
நூற்பாலைகளின் மிக முக்கிய மூலப்பொருளான பருத்தியின் விலை 2011ம் ஆண்டு குவிண்டால் ஒன்
றுக்கு ரூ.6,200 என்ற புதிய உயரத்தைத் தொட்டது. பின் மார்ச் மாதத்தில் விலை குறையத் துவங்கி
யது. இதற்கு, அதிக உற்பத்தி மற்றும் உலகப் பொருளா
தாரப் பின்னடைவினால் ஏற்பட்ட தேவைக்குறைவே காரணம். இருப்பினும், 2010 முதல் 2011ம் ஆண்டில் 25.10 மில்லியன் டன்களாக இருந்த பருத்தியின் உலக உற்பத்தி 2011-2012ம் ஆண்
டில் 26.78 மில்லியன் டன்
களாக அதிகரித்துள்ளது. கடந்த 10 மாதங்களாக கீழ்நோக்கிச் சென்ற பருத்
தியின் விலை தற்போது சீரடைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சீனா மேற்கொண்டுள்ள பருத்
திக் கொள்முதல் ஆகும்.
கடந்த ஆண்டு 111.42 லட்சம் எக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. அதுவே, இவ்வாண்டு 121.91 லட்சம் எக்டேராக அதிகரித்துள்
ளது. மேலும், பருத்தி பரிந்
துரை வாரியம் 2011-12ல் இந்தியாவில் பருத்தி உற்
பத்தி 345 லட்சம் பொதிக
ளாக இருக்கும் என கணக்
கிட்டுள்ளது. இந்திய அர
சாங்கம் பருத்தி ஏற்றுமதி மீதிருந்த தடையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
நீக்கியது. இதனால், பருத்தி பொது உரிமத்தின் (டீயீநn ழுநநேசயட டுiஉநளேந) கீழ் கொண்டு
வரப்பட்டது.
மேலும், உலக அளவில் பருத்தி உற்பத்தி செய்யப்
படும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கி
றது. தற்போது, இந்தியா
வின் பருத்தி ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 14 சதவிகிதம் அதிகரித்துள்
ளது. இதனால், இந்த ஆண்டு பருத்தி உற்பத்தி
80 லட்சம் பொதிகளாக இருக்கும் என எதிர்பார்க்
கப்படுகிறது. இதுவரை, 46 லட்சம் பொதிகள் ஏற்று
மதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 55-60 லட்சம் பொதிகள் ஏற்று
மதியாகும் எனவும் எதிர்
பார்க்கப்படுகிறது. அதிக உற்பத்தி, குறைந்த உள்
நாட்டுத் தேவை, மின்
வெட்டு மற்றும் குறைந்து வரும் பருத்தி விதையின் விலை போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருப்பி
னும், தொடர்ந்து சீனா மேற்கொள்ளும் கொள்
முதல் மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவற்றால் விலை சீராக இருக்கும்.
தமிழ்நாட்டில் சுமார் 2000 நூற்பாலைகள் இயங்
குகின்றன. இதனால், இந்தி
யாவில் உற்பத்தி செய்யப்
படும் பருத்தியின் அளவில் 47 சதவிகிதத்தை தமிழகம் பயன்படுத்தி வருகின்றது. ஆனால், தமிழகத்தில் செய்
யப்படும் உற்பத்தியின் அளவு சுமார் 5 லட்சம் பொதிகளேயாகும். கடந்த 2011-2012ம் ஆண்டில் தமிழ்
நாட்டில் சுமார் 1.22 லட்சம் எக்டேரில் பருத்தி பயிரி
டப்பட்டுள்ளது. தமிழகத்
தில் பருத்தி பயிரீட்டிற்கு ஏற்ற மாதமாக மாசிப்
பட்டம் என்றழைக்கப்
படும் பிப்ரவரி – மார்ச் மாதம் உள்ளது. இக்கால
கட்டத்தில் அதிக அளவில் சுரபி ரக பருத்தி பயிரிடப்
படும்.
எனவே, இப்பருவத்
தில் பருத்தியை பயிரிடுவ
தற்கு ஏதுவாக, வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தேசிய வேளாண் புதுமைத் திட்டத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், அவிநாசி மற்றும் கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை சங்
கத்தில் கடந்த 15 ஆண்டு
களாக நிலவிய பருத்தி விலைகளை ஆய்வு செய்
தது. இதில், ஆவணியில் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு தற்போது சந்தைக்கு வந்து கொண்டி
ருக்கும் பி.டி. (நீண்ட இழை) பருத்திகளுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,900 முதல் ரூ.4,200 வரை கிடைக்கும். சீனா செய்து வரும் பருத்திக் கொள்முதலை குறைத்துக் கொண்டால் பருத்தியின் விலையும் குறையும். ஆகவே, தற்போது அறுவடை செய்த பருத்தியை விவ
சாயிகள் உடனே விற்று விடும்படி பரிந்துரைக்கப்
படுகின்றனர்.
ஆகவே, இந்த ஆண்டு மாசிப்பட்டத்தில் பயிரி
டும் நீண்ட இழைப் பருத்தி ரகங்களுக்கு அறுவடைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை குவிண்
டாலுக்கு ரூ.4,300 முதல் ரூ.4,600 வரை கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்
ளது. எனவே, விவசாயி
கள் இவற்றைக் மனதில் கொண்டு மாசிப்பட்டத்
தில் பருத்தி பயிரிடும் முடி
வுகளை எடுக்குமாறு கேட்
டுக்கொள்ளப்படுகின்றனர். இதுகுறித்து மேலும் தக
வல்களைப் பெற, 0422 2431405 என்ற எண்ணை
யும், தொழில்நுட்ப விவ
ரங்களைப் பெற 0422 245697 என்ற எண்ணையும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்
திக்குறிப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: