தூத்துக்குடி, பிப்.27-
தூத்துக்குடி மடத்தூர் சுடுகாட்டில் வாலிபர் ஒரு வர் அழுகிய நிலையில் பிண மாக கிடப்பதாக ஞாயிற ன்று காலை தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போ லீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுடுகாட்டில் இறந்து கிடந் தது தூத்துக்குடி மீனாட்சி புரம் 3-வது தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் காசி (27) என்பது தெரிய வந்தது.
லாரி டிரைவராக வே லை பார்த்து வந்த காசிக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது. அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. காசி க்கு குடிப்பழக்கம் இருந்த தாகவும், இதனால் கண வன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இதேபோல பிரச்சனை ஏற்பட்டு அவ ருடையமனைவிகோபித்துக் கொண்டு பெற்றோர் வீட் டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த காசி கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத் தூர் சுடுகாட்டில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

Leave A Reply