நாகர்கோவில், பிப். 27-
குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி யாளர் பழகுநர் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள் ளனர்.
குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செய் திக்குறிப்பில் இதுபற்றி கூறப்பிட்டிருப்பதாவது:-
குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உத வியாளர் பதவியில் பழகுநர் பயிற்சிக்கான 45 பணி யிடங்கள் காலியாக உள் ளன.
இப்பணியிடங்களில் சேர விரும்புவோர் மார்ச் 20ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்தினை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத் துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மத்திய வங்கி உதவி யாளர் பணியில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பழகு நர் பயிற்சி(அப்ரென்டிஸ் டிரைனிங்) அளிக்கப்பட உள்ளது.
இப்பணியிடங்களில் சேர விரும்பும் விண்ணப்ப தாரர்கள், மேல்நிலைக் கல்வியில் கணக்குப் பதிவி யல் தொழிற்பிரிவு பாடத் தில் (அக்கொளண்டன்சி-வொக்கேஷனல் பிரிவு) தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். மேலும் விண்ணப்ப தாரர் மேல்நிலைக் கல்வி முடித்து 3 வருடங்கள் நிறைவடையாதவராகவும், பட்டப் படிப்பில் சேராதவ ராகவும் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்திருக்க வேண் டிய தேவை இல்லை.
பழகுநர் பயிற்சி கட்ட ணமாக(ஸ்டைபன்ட்) மாதம் ஒன்றிற்கு ரூ.1970 மத்திய அரசு மூலம் அனு மதிக்கப்பட்டு வழங்கப்படு கிறது.
மத்திய வங்கி தலைமை யகத்திலோ அல்லது மாவட் டத்திலுள்ள ஏதாவது ஒரு மத்திய வங்கி கிளையிலோ பயிற்சிதாரர் சேர்ந்து பயிற்சியை மேற்கொள்ள லாம்.
எனவே, தொழில் பழகு நர் பயிற்சியில் சேர விருப் பமுள்ள விண்ணப்பதாரர் கள் இது தொடர்பான கூடு தல் விபரங்களை 9894841291 என்ற செல்போன் எண் ணில் மத்திய வங்கியை தொ டர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது

Leave A Reply

%d bloggers like this: