மக்களுக்காக நடந்த மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாட்டுச் செய்திகளை தொடர்ந்து வாசித்தேன். உழைக்கும் மக்கள் நலனை மட்டுமே நினைவில் கொண்டு, மாநாட்டு நிகழ்ச்சி நிரலும், தலைவர்களின் பேச்சும், தீர்மானங்களும் அமைந்திருந்தன. தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சில்லரை வியாபாரிகள் என அனைவரைப் பற்றியும் கவலைப்படும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது மீண்டும் உலகுக்கு காட்டப்பட்டு இருக்கிறது. இன்றைய நிலையில், தீண்டாமை, மதவெறிக்கு எதிராக பேசும் முழு யோக்கியதைகூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. தலைவர்களின் துதியாய், “மூஞ்சிகாட்டி” அரசியலாய் மாறிவிட்ட மற்றகட்சி மாநாடுகளை பார்க்கும் போது, மார்க்சிஸ்ட் கட்சி மீதான நம்பிக்கையும், மதிப்பும் அதிகரிக்கிறது. – மா.காளிதாஸ்,
திருவண்ணாமலை
////////
அமெரிக்காவின் நோக்கம்
15.2.12 தீக்கதிரில், “போர்வெறி யும், கார் எரிப்பும்” தலையங்கம் கண் டேன். உண்மை நிலையை உள்ளபடி தெளிவாக விளக்குகிறது.
ஈரான் மீது தனது அடக்குமுறை போர்வெறியை ஏதாவது வடிவத்தில் திணிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்துக் கொண்டிருப்பதன் பின் னணிதான் இந்த கார் எரிப்புச் சம்பவம் என்பதை உணர முடிகின்றது.
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அமெரிக்கா, அதன் பிடி யில் இருந்து தன்னை விடுவித்து கொள்கின்ற முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து, ஈரானை அழிப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கும் செயலை உலக நாடுகள் தடுக்க முன்வர வேண்டும்.
இப்படியான உண்மைச் செய்தி களை, நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் வேறு எந்த இதழ்களும் வெளியிடவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
– மு.அய்யூப்கான், கும்பகோணம்
////////
வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா?
கோழி முந்தியா; முட்டை முந் தியா? என்ற கேள்விக்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள், இரண் டும் முந்தியில்லை, வேறொன்றி லிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன் றியது என்று பதிலளிப்பார்.
அதுபோல தமிழகத்தில் நடந்த தேர்தல் வெற்றிக்கு காரணம் அதிமுக-வா; தேமுதிக-வா? என்றால், இரண் டுக்கும் மேலே திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு; குடும்ப ஆதிக்க அரசியல், மின்வெட்டு போன்ற மோச மான செயல்பாடுகளும், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களும் முக்கிய காரணங்களாகும்.
இதனிடையே கடந்த ஆட்சியின் சீர்கேடுகளை களைந்து, மக்கள் நலப்பணிகளை செய்வதை விடுத்து, சவால் விட்டுக் கொண்டும், “வெட்கப் பட்டுக்” கொண்டும் இருக்கிறார், ஜெய லலிதா!
தமிழகத்தில் தற்போது வரலாறு காணா 11 மணிநேர மின்வெட்டு உள்ளது, பரமக்குடி துப்பாக்கிச் சூடு துவங்கி, இரு ளர் பெண்கள் பாலியல் பலாத்காரம்; லாக்கப் படுகொலை என காவல்துறை யின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. சங்கிலி அறுப்பவன் எல்லாம் ஆந்தி ராவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக ஜம்பமாக சொன்னார், ஜெயலலிதா! ஆனால், அதற்கு நேர்மாறாக அன் றாடம் பட்டப்பகலில் கொலை, கொள்ளை என்று சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
மறைமுகமாக பாஜகவோடு உறவு, பால், பஸ் கட்டண உயர்வு ஆகிய மக்கள் விரோத செயல்களை அரங் கேற்றியதற்கு வெட்கப்படாமல், மீண் டும் வேதாளம் முருங்கை மரம் ஏறு கிறது.. ஆணவ, அதிகார, மமதைப் பேச்சுக்களைத் தவிர்த்து, தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், மக்கள், விக்கிரமாதித்தனாக எழுந்து, வேதாளத்தை வீழ்த்துவார்கள்.. என்பதை முதல்வர் ஜெயலலிதா உணர வேண்டும்.
– மாஸ்கோ ராஜேந்திரன், அய்யம்பேட்டை
////////
குடிகெடுக்கும் நீடிப்பு
டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் அதிகரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப் படுகிறது. இதன்மூலம் மேலும் பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும். கோடிக்கணக்கான அபலைப் பெண்களின் “அன்புச் சகோதரி” என் றும் “தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரும் எனக்குச் செல்லப்பிள்ளைகள் தான்” என்றும் அவ்வப்போது முத ல்வர் கூறுகிறார்.
ஆனால், அந்த அன்புச் சகோதரி தான், சக சகோதரிகளின் குடி கெடுக் கும் வேலையையும், செல்லப்பிள்ளை களையே குடிக்கு அடிமையாக்கும் செயலையும் புரிகிறார்.
“துக்ளக்” சோ-தான் முதல்வருக்கு பல்வேறு ஆலோசனைகளைத் தருவ தாக பேசப்படுகிறது. இந்த ஆலோ சனையையும் அவர்தான் தந்தாரோ?
-இலட்சுமி நாராயணன், திருவல்லிக்கேணி
////////
கருத்துக்களை வெளியிடுக!
“சென்னை ஆசிரியை படு கொலை… யார் குற்றவாளி?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க செய்தி தீக்கதிரில் வெளியாகி உள்ளது. இதில், தலைமை வகித்தவர் துவங்கி நன்றி கூறியவர் வரை பெயர்கள் வந் துள்ளன. ஆனால், கருத்தரங்கில் என்ன பேசப்பட்டது, என்று ஒருவரி கூட இடம்பெறவில்லை. இச்செய் தியை வாசிக்கும் வாசகனுக்கு என்ன பயன்? எனவே, பேசியவர்களின் கருத் துக்களையும் இடம்பெறச் செய்திருக் கலாம்.
– கே.நாராயணசாமி, தஞ்சாவூர்

Leave a Reply

You must be logged in to post a comment.