தூத்துக்குடி, பிப்.27-
வாக்குமூலத்தில் போலி கையெழுத்து போட்டு வழ க்குப் பதிவு செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் திருவரங் கம்பட்டியை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மகன் டேனியல். இவருக்கும் இவருடைய பெரியப்பா பொன்னுசாமி மகன் பால சிங்கிற்கும் நீண்ட நாட் களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 8-5-11 அன்று டேனியல் அந்த பகுதியில் உள்ள தனது வயலில் தண் ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பாலசிங்கும், அவருடைய மகன் ஜெப செல்வமும் சேர்ந்து டேனி யலை மண்வெட்டியால் தலையில் வெட்டி, அடித்து உதைத்ததாகவும் கூறப்படு கிறது.
இதில் படுகாயமடைந்த டேனியல், பாளையங்கோ ட்டை ஐகிரவுண்டு மருத் துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். நீண்ட நாட்களாக மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஅவரிடம், செய்துங்கநல்லூர் போலீ சார் வாக்குமூலம் பெற்ற னர். இதற்கு சாட்சியாக டே னியலின் மகன் தினகரன் சாட்சி கையெழுத்துப் போட் டார்.
இதைதொடர்ந்து மறு நாளும் டேனியலிடம் போ லீசார் ஒரு வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்கு மூலத்தில் தினகரன் கை யெழுத்துப் போடவில்லை. ஆனால் தினகரன் கையெ ழுத்தை போலீசாரே போ ட்டு பாலசிங், அவருடைய மகன் ஜெபசெல்வம் ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய் யாமல், சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன் றத்தில் டேனியல் ஒரு வழ க்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி விசாரித்து, சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக் குப்பதிவு செய்து விசாரிக்கு மாறு மாவட்டகுற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தர விட்டார்.
இதைதொடர்ந்து செய் துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெய்லூகாத்தபெருமாள், போலீசார் ஜோதி, வெள் ளேரி ரூசோ ஆகிய 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 218 (தண்டனையில் இருந்து காப்பாற்றுவது), 468 (மோசடி கையெழுத்து), 471 (போலி கையெழுத்தை உண்மை போன்று பயன் படுத்தி நீதிமன்றத்தில் தாக் கல் செய்தல்) ஆகிய 3 பிரிவு களில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் கிருஷ்ணன் வழ க்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்.

Leave A Reply