பிரான்சிஸ் சேவியர் கல்லூரியின்
12 வது ஆண்டுவிழா
திருநெல்வேலி, பிப். 27 –
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் கல்லூரியின் 12 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்குகல்லூரியின்நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தினராக மாநில தகவல் உரிமை முன்னாள் ஆணை யர் ராமகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற் றும் தற்போதைய மாநில தகவல் உரி மை ஆணையர் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கல் லூரியின் டீன் ரோசையா செல்வம் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் ராஜகோபால் ஆண்டறிக் கை சமர்ப்பித்தார். ஸ்காட் குழும பொதுமேலாளரும் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலருமான தம்பிதுரை ஆண்டு விழாவை வாழ்த்திப் பேசினார். முன்ன தாக கல்லூரியின் 12 -வது ஆண்டு விழா போட்டிகள் நடைபெற் றன. அவற்றில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்க்கு பரிசு கள் வழங்கப்பட்டன. கல்லூரி யின் டீன் முனைவர் கணேஷ் பாபு நன்றி கூறினார். ஆண்டு விழா ஏற்பாடுகளை கல்லூரி யின் நிர்வாக அதிகாரி கிருஷ் ணகுமார், கல்லூரியின் முதல் வர் ராஜகோபால் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந் தனர்.
\\\\\
விபத்தில் 6 பேர் காயம்
தூத்துக்குடி, பிப்.27-
கோவில்பட்டி அருகே வேன்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண் கள் மற்றும் 2 சிறு வர்கள் காயமடைந்தனர்.
வெள்ளப்பனேரி அருகேயுள்ள ஓலைகுளத் தைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் மனைவி வெள்ளிமணி(25), அதே ஊரைச் சேர்ந்த சுப்பராஜ் மனைவி கலாவதி (35), அருள்ராணி (30), பொன்னுத்தாய் (28), சதீஷ்குமார் (11), கார்த்திக் (3) ஆகியோர் இருக்கன்குடி கோவிலுக்குச் சென்று விட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த வேன் , கோவில்பட்டி அருகேயுள்ள புல் லவாய்ப்பட்டி அருகே வந்தபோது தனியார் நூற் பலைக்கு சொந்தமான வேன் மீது மோதியது. இதில் வெள்ளிமணி உள்ளிட்ட 6பேர் காயமடை ந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து சாத் தூர் தாலூகா போலீசார் விசராணை நடத்தி வரு கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.