புதுதில்லி, பிப். 27 –
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் நடத் தும் பிப்ரவரி 28ம்தேதி வேலைநிறுத்தத்தை கை விடுமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளை தொழிற் சங்கங்கள் நிராகரித்தன.
காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் ஐஎன்டியுசி சங் கத்தின் தலைவர் ஜீ. சஞ்சீவ ரெட்டியிடம் பேசிய பிரத மர், வேலைநிறுத்தத்தை அனைத்துத் தொழிற்சங்கங் களும் கைவிடுமாறு வேண்டுகோள்விடுத்தார். அரசின் தாராளமயக் கொள் கைகளின் பல்வேறு பிரச்ச னைகளை எதிர்த்து, அனைத்து தொழிற்சங்கங் களும் ஒன்றிணைந்து, சுதந் திரத்திற்கு பின்னர் நடத்தும் முதல் மாபெரும் வேலை நிறுத்தம் இதுவாகும்.
வேலைநிறுத்தத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக, அதனை கைவிடுமாறு பிரத மர் விடுக்கும் வேண்டுகோள் அர்த்தமற்றது. தொழிலா ளர்களின் நலன்கள் மீது, அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் அனைத்துத் தொழிற்சங் கங்கத் தலைவர்களையும், வேலைநிறுத்தத்திற்கு பின் னர், அரசு அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.
இதற்கிடையே தொழி லாளர்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, விடுத்த அறிக்கையில், தொழிலாளர்கள் தொடர் பாக மத்தியத்தொழிற்சங் கங்கள் எழுப்பிய விவரங்கள் குறிப்பிட்ட அளவு விவாதிக் கப்பட்டுள்ளன. இருப்பி னும், தொழிலாளர் பிரச்ச னைகள் குறித்து, சுமூகமாக பேசித்தீர்வுகாண விரும்பு கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கீகாரம் பெற்ற 11 தொழிற்சங்கங்கள், ஓய்வூதி யம், ஒப்பந்தத் தொழிலாளர் கள் பணிநிரந்தரம், தனியார் மயம் எதிர்ப்பு என பல் வேறு பிரச்சனைகளுக்காக அகில இந்திய வேலைநிறுத் தத்தை மேற்கொள்கின்றன.
ஒவ்வொருத்தொழிற் சங்கமும் அங்கீகாரம் பெற 4 லட்சம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அனைத்து அடிப்படை தொழிலாளர் விதிமுறைகளும் எந்த விதி விலக்கும் இல்லாமல் கடைப்பிடிக்க வேண்டும் என வேலைநிறுத்தப் போராட்டத்தின் கோரிக் கைகளாக உள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில் இந்தி யத் தொழிலாளர் ஆண்டு மாநாடு பிப்ரவரி 14, 15ம்தேதிகளில் நடைபெற்ற போது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் அவரிடம் எடுத்து வைக்கப்பட்டன.
அந்தக் கோரிக்கை களுக்கு பிரதமரோ, தொழி லாளர்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், பிப்ரவரி 28ம்தேதி, அகில இந்திய வேலைநிறுத்தத்தை நாடு எதிர்கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: