தூத்துக்குடி, பிப்.27-
மாணவர்கள் படிக்கும் போதே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண் டும் என தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கி பொது மேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை பேசினார்.
தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி யின் 24வது ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் மெர்க் கண்டைல் வங்கி பொது மேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை தலைமையில் நடந்தது. விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரி முன் னாள் செயலாளர் சண் முகப் பிரியா, முன்னிலை வகித்தார். கே.வி.எஸ் பள்ளி செயலாளர் டாக்டர் சி.எஸ். தேவேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளி தலைமை ஆசிரி யை டி. கலாதேவி ஆண்ட றிக்கை வாசித்தார். விழாவில் பள்ளியில் புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்தை விருது நகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரி முன்னாள் செயலா ளர் ராஜசேகரன் திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கி பொதுமேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை, கே.வி.எஸ் பள்ளி, காமரா ஜர் வழியில் கல்வியை வியா பாரம் நோக்கமில்லாமல் சேவை மனப்பான்மை யோடு கற்பிக்கிறது. இப்பள் ளியில் பிளஸ் -2 ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்பள்ளியில் படிக் கும் மாணவ- மாணவிகள் பிற்காலத்தில் ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வரவேண்டும்.
மாணவர்கள் படிக் கும்போதே தங்களது தன் னம்பிக்கையைப் வளர் த்துக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கையோடு படித்தால் வெற்றி நிச்சய மாகும் என்றார்.
விழாவில் பள்ளி தலை வர் சி.எஸ் ராஜேந்திரன், துணைத்தலைவர் டி.செந் தில் கண்ணன், இணைச் செயலாளர் சி.ஜே.மதன், பொருளாளர் பி.கே.யோக ராஜன், பள்ளி சிறப்பு ஆலோசகர் டி.ஆர்.தமிழ ரசு, உப்பு உற்பத்தியாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ- மாணவியரின் நடன நாட்டியமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை டி. கலாதேவி மற்றும் ஆசிரி யைகள் செய்திருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.