நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ஆரஞ்சுப்பழம், ரத்தம் உறைவதால் ஏற்படும் பக்கவாதப் பாதிப்பைத் தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக, பெண்கள் இந்தப் பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய் வாளர்கள். கிட்டத்தட்ட 69 ஆயிரம் பெண்களைக் கொ ண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. வைட்டமின்-சி இடம் பெற்றிருக்கும் பழங்கள் மற்றும் அதன் சாறு ஆகி யவை பற்றி இந்த ஆய்வுக்குழு தனது ஆய்வினை நடத்தி யது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்குதல் உள்ளிட்ட வேறு பல பலன்களையும் இது தருகிறது. இதையும் தங்களின் ஆய்வுகளின் ஒரு பகுதியாக ஆய்வாளர்கள் கூறியிருக் கிறார்கள். இந்த ஆய்வுக்குழு பெண்களின் உடல் நலன்பற்றி தனியாகப் பல்வேறு சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்வதில் மும்முரமாக இறங்கியுள்ளது.

Leave A Reply