மேட்டுப்பாளையம், பிப். 27-
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலுக்கு புதிய என்ஜின்கள் வாங்க முடிவு செய்யப்பட் டது. அதன்படி திருச்சி பொன் மலை ரெயில்வே பணிமனை யில் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் என்ஜின்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டது.
ஏற்கனவே தயாரான பர் னஸ் ஆயில் என்ஜின் மேட்டுப் பாளையம் வந்து சேர்ந்தது. மற்றொரு பர்னஸ் ஆயில் என்ஜின் கடந்த 25-ந் தேதி பொன்மலை ரயில்வே பணி மனையில் இருந்து லோபெட் ரயிலில் ஏற்றப்பட்டு திங்க ளன்று காலை 5-45 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. என்ஜினை இறக்கி வைக்க ஈரோட்டில் இருந்து 140 டன் எடை கொண்ட ராட் சத கிரேன் மேட்டுப்பாளை யம் கொண்டுவரப்பட்டது. அந்த கிரேன் மூலம் புதிய பர்னஸ் ஆயில் என்ஜின் இறக்கி வைக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: