நாகர்கோவில், பிப். 27-
நாகர்கோவில் நகராட்சி எல்லைக்குள் 2006 – 2012 வரை 2169 வீடுகள் அனுமதி யின்றி கட்டப்பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
நகராட்சி எல்லைக்குள் கட்டப்படும் வீடுகள் நகரா ட்சி வீட்டுமனை சட்டத் தின்படி கட்டவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நக ராட்சிகளில் வீட்டுமனை சட்டங்கள் பின்பற்றப் படாமல் வீடுகள் கட் டப்படுகின்றன.
புறம்போக்கு நிலங்க ளில் வீடுகள் கட்டக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் நகராட்சி வீட்டுமனை சட்டம் நிறைவேற்றப் பட்டது.
ஆனால் அரசியல் கார ணமாக நகராட்சியின் சட் டத்தை செயல்படுத்த முடி யாமல் ஏராளமான வீடுகள் அனுமதியின்றி கட்டப் படுகின்றன.
வீடு கட்டுவதற்கு வரை பட அனுமதி அவசியம். ஆனால் வரைபட அனுமதி நகராட்சியால் மறுக் கப்படும்போது, வீடு கட்டு பவர்கள் திட்டமிட்டபடி வீட்டை கட்டி முடித்து விட்டு, பின்னர் நகர்மன்றத் தை அணுகி ரூ.250 அல்லது ரூ.500 அபராதத்தை கட்டி விடுகின்றனர்.
அபராத தொகை கட் டியதும் வீட்டிற்கான மின் இணைப்பு கொடுக்கப்ப டுகிறது.
வீடு அனுமதியற்ற வீடாக இருந்தாலும், அப ராதம் கட்டுவதால் வீட் டிற்கு வேண்டிய மற்ற வச திகள் கொடுக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் உள்ளூர் திட்டக் குழுமத் தின் அனுமதியின்றி 2006 – 2011 வரை 2169 கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட் டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: